பக்கம்:பாட்டுத் திறன்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 . பாட்டுத் திறன் கவிஞனுக்கு ஆர்வம் இல்லை என்பதையும். உள்ளம் விழையு மாறு அமையும் கற்பனையில் அவனுக்கு ஆர்வம் மிகுதி என்பதையும் அறிகின்றோம். இந்த அடிப்படையில் கவிஞன் தான் காணும் உலகத்தைவிடச் சிறந்ததோர் உலகைப் படைக்க விழைகின்றான். இந்த விழைவே அவனது அகத்தெழுச்சிக்கு" காரணமாக கின்று புதியனபடைக்கும் ஆற்றலைப் பெறவும் வாய்ப்பாக அமைகின்றது. சுனையில் சிறிதளவே நீர் உள்ளது. அதைப் பருகச்சென்ற ஆண் மானுக்கும் பெண் மானுக்கும் அங்ர்ே போதாது; ஒரு விலங்கு குடிப்பதற்கே போதாத அளவில் நீர் உள்ளது; அதை உணர்ந்த ஆண் மான் தான் குடிக்காமல் ஒதுங்கி நின்று பெண்மானைக் குடிக்குமாறு செய்ய எண்ணுகின்றது. பெண் மானும் அவ்வாறே ஒதுங்கி நிற்கின்றது. இதை அறிந்த ஆண் மான் ஒரு தந்திரம் செய்கின்றது. பெண் மானுடன் தானும் செல்லுகின்றது. இரண்டும் தண்ணிரில் வாயை வைக்கின்றன. ஆனால் ஆண்மானோ குடிப்பது போல் கடித்து நீரை உள்ளுக்கிழுத்துப் பருகாமல் உறிஞ்சி மூச்சு விட்டுக் கொண்டிருக்கின்றது. பெண்மானின் நீர் வேட்கை தணிய வேண்டுமே என்ற தன் விருப்பத்தை இவ்வாறு கிறைவேற்றிக் கொள்ளுகின்றது. தான் ரிேன்றி வருந்தும் அளவுக்குத் தியாகம் செய்துவிடுகின்றது. சுனைவாய்ச் சிறுநீரை எய்தாதென் றெண்ணிப் பிணைமான் இனிதுண்ண வேண்டிக்-கலைமாத்தன் கள்ளத்தின் ஊச்சும் சுரமென்ப காதலர் உள்ளம் படர்ந்த நெறி.12 என்பது மேற்கண்ட நிகழ்ச்சியை விளக்கும் கவிதை. இங்கனம் நடைபெறுவது இயலாததொன்று என்பதைக் கவிஞன் நன்கு அறிவான். ஆயின், அன்பின் காரணமாக ஆண் மாண் பெண் மானுக்கு வேறு உதவிகளைச் செய்தலை அறிந்த அவனுடைய உள்ளம் இவ்வாறு கற்பனை அமைக்க விழைந்தது. ஓரளவு கவிதை மனப்பான்மையுள்ள நாம் அதனைப் படித்து நன்கு அநுபவிக்கின்றோம். கவிஞனுடைய அநுபவம் கம் அதுபவ மாக மாறிவிடுகின்றது. 11. **#3&4945. Inspiration. 13, ஐந்திணை ஐம்பது . 38.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாட்டுத்_திறன்.pdf/22&oldid=812499" இலிருந்து மீள்விக்கப்பட்டது