உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாட்டுத் திறன்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுத் திறன் 1? மேற்கூறிய உள்ளம் விரும்பும் கற்பனைக்கு வாழ்க்கை அடிப்படையாக அமைகின்றது. வாழ்க்கையின் அநுபவமே அத்தகைய கற்பனையைத் தாண்டுகின்றது. துன்பம் உறுங்கால் வருந்துவதும், இன்பம் எய்துங்கால் மகிழ்வதும் எல்லா உயிர் கட்கும் பொதுவாக இருப்பினும், மனித வாழ்வில் மட்டிலுமே பழைய உணர்ச்சிகளின் கினைவுகள் மீண்டும் அத்தகைய அதுபவத்தை உண்டாக்குகின்றன. நேற்று உற்ற துன்பத்தை யும் காளை வரும் துன்பத்தையும் கினைந்து வருந்தும் உள்ளம் மனிதனைத் தவிர எந்த உயிர்க்கும் இல்லை; மனிதனிடம் மட்டிலும் அது கினைவு அளவில் நின்று எல்லாக் காலத்திற்கும் உரியதாகின்றது. மனிதனிடம் அமைந்துள்ள இந்தச் சிறப் பியல்பே கலைத்துறையில் வளர்ந்து கற்பனைத் திறனாக அமைந்துவிடுகின்றது. இத்தகைய கற்பனைத்திறனால்தான் திருத்தக்கதேவர், இளங்கோவடிகள் போன்ற துறவியரும் காதலுக்குச் சிறந்த வடிவு தந்து பாட முடிகின்றது. திருவள்ளுவர் போன்ற அறவாழ்வு வாழ்ந்த பெரியோர்களும் வரைவின்மகளிர், கூடாவொழுக்கம் போன்றவற்றையும் சிறந்த முறையில் பாடியுள்ளனர். அன்பு, நட்பு ஆகிய அநுபவங் களைக்கொண்டே அவர்கள் காதல் உணர்ச்சியையும் கற்பனை செய்து பாடியுள்ளனர். ஒருவன்-ஒருத்தி வாழ்க்கையின் அதுப வத்தைக்கொண்டே அதற்கு எதிர்மறையாக வுள்ளவற்றையும் பாடியுள்ளனர். உணர்ச்சியுடன் கண்டதொரு கிகழ்ச்சியை உள்ளத்தில் அவ்வதுபவம் முழுவதும் தோன்றுமாறு திரும்பக் கொணர்ந்து பாடுதல் ஒருவகை; கற்பனையாகவே ஒன்றைப் படைத்து அதற் கியைந்த உணர்ச்சி முழுவதையும் பெற்று அதைத் தன் அதுபவ மாக்கிக்கொண்டு அவ்வதுபவம் வெளிப்படுமாறு பாடுதல் மற்றொருவகை. முன்னது கைகூடும் ஒருவர்க்குப் பின்னதும் கைகூடும். - கலையினால் திங்கள் போல வளர்கின்ற காலத் தேயுன் சிலையினால் அரியை வெல்லக் . காண்பதோர் தவமும் செய்தேன்; தலையிலா பாக்கை கான - எத்தவம் செய்தேன்? அக்தோ! கிலையிலா வாழ்வை இன்னும் நினைவனோ நினைவி லாதேன்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாட்டுத்_திறன்.pdf/23&oldid=812521" இலிருந்து மீள்விக்கப்பட்டது