பக்கம்:பாட்டுத் திறன்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 பாட்டுத் திறன் தாளரிச் சதங்கை யார்ப்பத் தவழ்கின்ற பருவங் தன்னில், கோளரி யிரண்டு பற்றிக் கொணர்ந்தனை, கொணர்ந்து கோபம் மூளுறப் பொருத்தி மாட முன்றிலின் முறையி னோடு மீளரு விளையாட் டின்னங் காண்பனோ விதியி லாதேன்? அம்புலி அம்ம! வா வென் றழைத்தலும் அவிர்வெண் திங்கள் இம்பர்வங் தானை அஞ்சல்!” எனவிரு கரத்தின் ஏந்தி வம்புறு மறுவைப் பற்றி முயலென வாங்கும் வண்ணம் எம்பெருங் களிறே காண வேசற்றேன் எழுந்தி ராயோ?18 இம் மூன்று பாடல்களும் மேகநாதன் இறந்துபட்ட ஞான்று அவன் உடலின்மீது வீழ்ந்து அவனைப் பெற்ற தாய் மண்டோதரி புலம்புவதுபோல் பாடியவை. கம்பனுக்கு இவ்வதுபவம் இருந்ததில்லை. அதனைக் கற்பனையால் உணர்ந்து பாடியுள்ளான். இக்கவிதைகளைப் படிக்கும் காமும் துயரம் மிகுந்த அந்தத் தாயின் மனநிலையை நன்கு உணர முடிகின்றது. கவிஞன் கற்பனையில் பெற்ற அதுபவம் நம்முடைய அநுபவமாகிவிடுகின்றது. இவ்வாறு கவிஞர்கள் காவியங்களிலும் கதைகளிலும் 'இல்லது, இனியது, நல்லது' என்பவற்றைக் கற்பனைத் திறனால் மனம் விரும்பியவாறு கவிதையால் வருணித்திருப்ப தால், அவற்றைப் படிக்கும் நாம் அக்கவிதையில் திளைக் கின்றோம். கவிஞன் உணர்ச்சியும் காவிய மாந்தர்களின் உணர்ச்சியும் நம்முடைய உணர்ச்சியாக மாறிவிடுகின்றன. சொல்வளம்: கவிதைகளின் உணர்ச்சிகளுக்கேற்பச் சொற் கள் வளமாக அமைந்து கவிதைகளைச் சிறப்பிக்கும். இந்தச் 18. இராவணன் சோகப்-47, 49, 50. - 14 ஒரு கால், அம்பிகாபதியை நினைத்து இவ்வாறு புலம்பி னானோ என்று கருத இடம் உள்ளது. இஃது ஆராயத்தக்கது. கம்பனில் மக்கள் குரல்’ என்ற இவ் வாசிரியர் எழுதி புள்ள நூலில் கம்பனில் குழந்தை இன்பம் என்ற கட்டுரையைக் காண்க,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாட்டுத்_திறன்.pdf/24&oldid=812543" இலிருந்து மீள்விக்கப்பட்டது