பக்கம்:பாட்டுத் திறன்.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல்-11 ஒலிநயம் வாழ்க்கை இயக்கமாக நடைபெறுகின்றது; அங்ங்னமே வாழ்க் கையிலிருந்து மலரும் இலக்கியமும் இயக்கமாகவே அமைகின்றது. இயற்கையில் கடைபெறும் அத்தனை இயக்கங்களும் ஒழுங்கா கவே நடைபெறுகின்றன; சில நிலையான விதிகளுக்குக் கட்டுப் பட்டே நடைபெறுகின்றன. சாதாரணமாக ஒரு செயல் கடை பெறும் காலத்திற்குப் பிறகு அமைதி நிலவும் காலமும் உண்டு; ஒர் அழுத்தம் அதன் பிறகு ஓர் இடை நிறுத்தம்’ என்ற முறையில் அது நடைபெறுகின்றது. இவ்வாறு ஒழுங்காக நடைபெறும் இயக்கத்தைத்தான் ஒலி நயம்’ என்று வழங்குகின் றோம். மூச்சு விடுதல், கடத்தல், ந்ேதுதல் ஆகிய செயல்கள் யாவும் இயல்பாக நடைபெறுங்கால் ஒலிகயத்துடனேயே கடை பெறுகின்றன. அதிக உள்ளக்கிளர்ச்சி ஏற்படுங்கால் அல்லது இயல்பிகக்த கிளர்ச்சி" யுறுங்கால் ஒலி கயத்தில் குழப்பம் உண்டாகின்றது; ஆனால், அக் குழப்பம் சிறிது காலமே நீடிக்கும் தன்மையது. தற்காப்பின் பொருட்டு உடல் சாதாரண சிலையை எய்துகின்றது; இல்லாவிடில் களைப்பு ஏற்படும். அழுத்தக் காலத்தை நாம் சிறிது நீட்டிக்கச் செய்யலாம் என்பது உண்மையே; ஆனால், அதற்கேற்றவாறு நிறுத்தக் காலத்தையும் நீட்டிக்க வேண்டும். இதனால் இயக்கம் மெதுவாக நடைபெறும். அங்ங்னமே, அழுத்தக் காலத்தையும் கிறுத்தக் காலத்தையும் குறைத்து இயக்கத்தைத் துரிதப்படுத்தவும் செய்யலாம். எடுத்துக்காட்டாகப் படகு வலிக்கும்பொழுது, மூச்சைக் கட்டிக் கொண்டு ஒரு நீண்ட பலமான வலிப்பை மேற்கொள்ளலாம்; ஆனால், நம்முடைய வலிப்புக்கள் விரைந்து ஒன்றையொன்று தொடர்ந்து வருமாறும் மாற்றிக் கொள்ளலாம். எனினும், ஒரு 1 - ang # # Üb - Stress 2. இடை நிறுத்தம்-Pause, వీ, ஒலி guito-Rhythm. 4. உள்ளக் &sirá &ß-Emotion, 5. இயல்பிகந்த கிளர்ச்சி-Excitement,