பக்கம்:பாட்டுத் திறன்.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

303 பாட்டுத் திறன் முறையிலிருந்து பிறிதொரு முறைக்கு அடிக்கடி மாற்றுவதை கம்முடைய தசைகள் விரும்புவதில்லை; வெறுக்கின்றன. கம்முடைய பேச்சும் இம்மாதிரியே ஒழுங்குபடுத்தப் பெறு கின்றது, நம்முடைய தொண்டையின் அமைப்பு ஒரு சொல்லின் ஒர் அசைவிலேயே உச்சரிப்பழுத்தம்" கொடுக்குமாறு செய்கின் றது. எ-டு : இருக்கின்றான். இச்சொல்லின் எல்லா அசைகளுக் கும் சமமான அழுத்தங்கொடுத்து இருக்-கின்றான்' என்று உச்சரிப்பதும் சாத்தியப்படக்கூடியதே; ஆனால், இத்தகைய தெளிவான முயற்சியைத் தொடர்ந்து மேற்கொள்ள முடியாது. இத்தகைய உச்சரிப்பு இயற்கைக்கு மாறாக இருப்பதைப் போலவே இன்பங்தரக்கூடாததாகவும் உள்ளது. நம்முடைய தொண்டை கம்மிடம் உச்சரிப்பழுத்தத்தை வலிந்து புகுத்துவதைப் போலவே, நம்முடையதுரையீரல்"களும் ஒவ்வொரு சொற்களின் தொகுதிக்குப் பின்னரும் ஒர் இடை நிறுத்தத்தை மேற்கொள்ளுமாறு வல்லாட்சி செய்கின்றன. ஓர் அருவருப்பான பேச்சாளரிடம் இவ்வல்லாட்சியை வெளிப்படை யாகக் காணலாம்; சொற்களின் பொருள் துண்டுபடுமாறு அவர் இடைகிறுத்தத்தை மேற்கொள்ளுகின்றார். அஃதாவது, அவர் மூச்சுத் திணறும்பொழுது இடைநிறுத்தம் செய்கின்றார்; இதனால் அவர் பேச்சின் பொருள் கேட்போருக்கு விளங்காமற் போகின்றது. சுக்கு-மிளகு-திப்பிலி என்பதை அவர் சுக்குமிளகுதி-ப்பிலி என்று உச்சரித்துத் தன் பேச்சைப் பொருளற்ற தாக்கி விடுகின்றார். மிகவும் அழகாகப் பேசுபவரிடம் இங்ங்ணம் அமைவதில்லை. அவர் தம்முடைய மூச்சைத் தக்க முறையில் கட்டுப்படுத்தியும், சொற்றொடர்களின் நீளத்தைக் கட்டுப் படுத்தியும் தம் பேச்சில் அழகை வல்லந்தமாக கிலைநிறுத்து கின்றார்; இதனால் அவர் பேச்சின் பொருள் சிதையாதிருப்ப துடன், தக்க இடைகிறுத்தங்களால் பேச்சின் பொருளைத் தெளிவாகப் புரியும்படியும் செய்கின்றார். இத்தகையதோர் இயைபு அழகுள்ள அனைத்திற்கும் மிகவும் இன்றியமையாதது. உச்சரிப் பழுத்தம் Accept, s-44 füu-Pronunciation. கசையிசல்கள்.ings, சொற்றொடர்-Phrase,