பக்கம்:பாட்டுத் திறன்.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுத் திறன் 309 ஆனால் ஒலி நயம், கற்பனை, மோனை, எதுகை போன்ற கூறு களை அவற்றின் சாயல்களாக விட்டுச் சென்றுள்ளார். அவருடைய உணர்ச்சியைப் பெறவேண்டுமானால் அச்சு வடிவத்தில் கானும் அவருடைய சொற்களிலிருந்து மட்டிலும் பெறுதல் இயலாது. அச்சுவடிவத்தில் காணும் அவரது பாடல் ஒளிப்பட நெகட்டிவ்' போன்றது; கெட்டிவிலிருந்து படத்தி லுள்ளவற்றைத் தெளிவாகக் காணல் இயலாது. படத்திலுள்ள பொருள்களின் சாயல்ே அதில் இருக்கும். தக்க துணைப்பொருள் களைக் கொண்டு அந்த கெட்டிவிலிருந்து படத்தை அச்சிட் டால்தான் பொருள்களின் படம் தெளிவாகப் புலனாகும். அங்ங்னமே, கவிதையைப் பாடிய கவிஞன் தான் விட்டுச்சென்ற சாயல்களிலிருந்து படிப்பவர் பாட்டை யாத்தவரின்உணர்ச்சியை உண்டாக்குதல் வேண்டும். அங்ங்னமே உண்டாக்குவதற்கு மேற்கொள்ளப்பெறும் முயற்சி நெறியோடு அமைந்தால் விரும்பிய பயன் கிடைக்கும். இராமாயணம், பாரதம், பெரிய புராணம் போன்ற காவியங்களைத் தலைமுறை தலைமுறை யாகப் படித்து மக்கள் ஒரே வகையான உணர்ச்சியைப் பெற்று வருவதை இதற்குச் சான்றாகக் கொள்ளலாம். இளவேனிற் காலத்தில் திரும்பிவருவதாகக் கூறித்தலைவன் தலைவியைப் பிரிந்துசென்றான். இளவேனிற் காலம் வந்துவிடு கின்றது. தலைவன் வந்திலன். இந்த நிலையில் தலைவி. தலைவனை கினைந்து கினைந்து ஏங்குகின்றாள். -

வேம்பின் ஒள்ளிய மலர்கள் பூத்து நிற்கின்றன. என் தலைவர் இங்கில்லாமையால் கான் அப்பூக்களைச் சூடாமல் ஒழிவதோ? யாற்றின் அருகில் ஓங்கிய வெள்ளிய கொம்புகளை யுடைய அத்தியில் பழுத்த ஒருபழத்தை ஏழு கண்டுகள் பற்றுங் கால் அது குழைந்து சிற்பதுபோல, யான் குழைந்து சிற்கின் றேன். ஆனால், அவர் மிகக் கொடியவர் எனக் கூறும் தோழியர் முதலானோரின் காக்கள் குழைவின்றிக் கல்லென வாயின."

என்கின்றாள். கருங்கால் வேம்பின் ஒண்பூ யாணர் என்னை யின்றியும் கழிவது கொல்லோ? 22. Soflāui- G&so-A-à-Photographic negative. பா.-14