பக்கம்:பாட்டுத் திறன்.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுத் திறன் 213 டாகும் அழுத்த வேறுபாடு. இந்த மூன்று கூறுகளும் பல்வேறு அளவிலும் வகையிலும் சேர்ந்து உண்டாகும் ஒலிவிகற்பங் களையே நாம் ஒலிநயம் என்று வழங்குகின்றோம். இசைக் கலையில் இஃது அமையும் நிலை வேறு; பாட்டுக்கலையில் இது பயன்படும் நிலைவேறு. முன்னதில் அஃது அடிப்படையாக உள்ளது. பின்னதில் தேவையான அளவிற்கு நுட்பமாக விளங்குகின்றது. மேலே கூறியவற்றால் ஒலிநயம் என்பது சொற்களால் விளக்கக் கூடியதன்று என்பதும், அது புலன்களால் உணரக் கூடியதொன்று என்பதும் தெளிவாகும். ஒலிநயம் இயற்கை யானது; பொதுவானது. அந்த ஒலிநயத்திலிருந்துதான் கவிதை யின் யாப்பு முறை செயற்கை முறையாக அமைந்தது. அதனை அடுத்துக் காண்போம்.