பக்கம்:பாட்டுத் திறன்.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுத் திறன் 225. என்ற வடிவங் கொள்ளும். பண்டையோர் கண்ட வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்ற பாக்களின் யாப்பு முறைகளும் அவற்றின் ஒசைகளாகிய செப்பல், அகவல், துள்ளல், தாங்கல் ஆகியவைகளும் பல்வேறு உணர்ச்சி நிலை களைப் புலப்படுத்தப் போதுமானவையாக இல்லை. இடைக் காலத்தில் தோன்றிய தாழிசை, துறை, விருத்தம் என்னும் பாவினங்களுள் விருத்தம் ஒலிநயத்தைப் புலப்படுத்துவதில் தனிச் சிறப்புடன் விளங்கியது. அந்த விருத்த வகைகளுள், ஒன்றுதான் மேற் குறித்த பாட்டின் யாப்பு. தமிழ் யாப்புமுறை தனக்கென உரிய சிறந்த அமைப்புகளைக் கொண்டது; எளிமையும் இனிமையும் உடையது. இந்த யாப்புமுறை பாட்டைப் படிப்பவர்களை அப் பாட்டுடன் ஒன்றிவிடுமாறு செய்கின்றது. ஆங்கொரு கல்லை வாயிலிற் படிஎன் றமைத்தனன் சிற்பிமற் றொன்றை ஓங்கிய பெருமைக் கடவுளின் வடிவென் றுயர்த்தினான்: உலகினோர் தாய்நீ யாங்கணே எவரை எங்ங்னம் சமைத்தற் கெண்ணமோ அங்ஙனம் சமைப்பாய் ஈங்குணைச்சரணென் றெய்தினேன் என்னை இருங்கலைப் புலவனாக் குதியே: என்ற பராசக்தி வணக்கப் பாடலை இசையேற்றிப் படிக்கும் போது நம் உள்ளம் அதில் ஒன்றி விடுகின்றது. கூவிளம் தேமா கூவிளம் புளிமா கருவிளம் கூவிளம் தேமா கூவிளம், புளிமா கருவிளம் புளிமா கருவிளம் கருவிளம் தேமா கூவிளம் புளிமா கூவிளம் புளிமா - கூவிளம் கூவிளம் புளிமா கூவிளம் புளிமா கூவிளம் தேமா கருவிளம் கருவிளம் புளிமா. 18. பாரதி : பாஞ்சாலி சபதம் (இரண்டாம் பாகம்) பா.-15