பக்கம்:பாட்டுத் திறன்.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

334 பாட்டுத் திறன் பாட்டிலுள்ள ஓர் அடியைப் படித்து முடித்ததும், மனம் அதன் ஒலிநயத்தில் ஈடுபடுகின்றது. அடுத்த அடியைப் படிக்கத் தொடங்கும் பொழுது மீண்டும் அதே ஒலி நயத்தை எதிர்பார்க் கின்றது, எதிர்பார்க்கின்றபடி அவ்வொலி திரும்பவரின், அதில் மகிழ்ந்து திளைக்கின்றது. கைப்பழ மிழந்த மந்தி கட்டியங் கார னொத்த திப்பழங் துரந்து கொண்ட சில தனு மென்னை யொத்தான் இப்பழ மின்று போகத் தின்பமே போலு மென்று மெய்ப்பட வுணர்வு தோன்றி மீட்டிது கூறி னானே." என்ற சிந்தாமணிச் செய்யுளில் ஒரே ஒலியமைப்புத் திரும்பத் திரும்ப வரும்பொழுது அதைப் படிக்கும் நம் மனத்திற்கு மகிழ்ச்சியேற்படுகின்றது; பாட்டில் ஏற்பட்ட நிலையாமை' உணர்ச்சி சிதறாமல் காக்கவும் பெறுகின்றது. இதைத் தொடர்ந்து இன்னும் சில பாடல்கள் இத்தகைய ஒலியமைப்பே திரும்பத் திரும்ப அமைந்து வருங்கால், நிலையாமை உணர்ச்சி நிலைபெறப் பதிந்து உருவாகி விடுகின்றது. சீவகன் மனமும் துறவு நெறியில் சென்றுவிடுகின்றது. இந்த ஒலிகளைப் பகுத்துத்தான் நம் முன்னோர்கள் அசைகள் என்றும், சீர்கள் என்றும் யாப்பு முறைகளை வகுத்தனர். மேற்குறித்த பாடலுக்கு அவர்கள் வகுத்த வாய்பாடுகளை அமைத்தால் அது, கூவிளம் புளிமா தேமா கூவிளம் தேமா தேமா கூவிளம் புளிமா தேயா கருவிளம் தேமா தேமா கூவிளம் தேமா தேமா கூவிளம் தேமா தேமா கூவிளம் புளிமா தேமா கூவிளம் தேமா தேமா 17. சித்தாமணி.226.