பக்கம்:பாட்டுத் திறன்.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுத் திறன் 28 ஒரடியின் பல சீர்களிலாவது முதலெழுத்து ஒற்றுமைப்பட்டுவரத் தொடுப்பது. அ ஆ ஐ ஒள, இ ஈ எ ஏ யா, உஊ ஒலு,ளுக, சத, மவ இவை ஒன்றற்கு ஒன்று மோனையாய்வருதலும் உண்டு. சிறு பான்மை இனவெழுத்துகளும் மோனையாம். ஒரடியின் சீர்களி லெல்லாம் மோனைவந்தால், அது முற்றுமோனை. எனப்படும். சொல்லினாலாவது பொருளினாலாவது மாறுபடத் தொடுப்பது முரண்தொடை எனப்படும். ஈற்றெழுத்து ஒன்றிவரின் இயைபுத் தொடையாம். அளபெடை வரத் தொடுப்பது அளபெடைத் தொடையாகும். இவ்வைந்தும் பாட்டின் அடிதோறும் வருவதற் குரிய தொடைகளாகும். இந்த ஐந்து வகைத் தொடைகளும் அமையா திருப்பது செந் தொடை எனப்படும். இவற்றைத் தவிர இரட்டைத் தொடை எனவும் அக்தாதித் தொடை' என வும் வேறு இரண்டு தொடைகள் உள. ஒரடிமுழுவதும் ஒரு சொல்லே வரத் தொடுப்பது இரட்டைத்தொடை; முன்னின்ற பாட்டின் இறுதியிலுள்ள எழுத்தாயினும், அசைய்ாயினும், சீராயினும், அடியாயினும் பின்வரும் பாட்டின் முதலாக அமையப் பாடுவது அந்தாதித் தொடை. இங்ங்ணம் பாடும் நூலின் இறுதிச் செய்யுளின் அந்தமே முதற்செய்யுளிள் ஆதி யாக அமைவது மண்டலித்தல் எனப்படும். - பா. மேற்கூறிய அசை, சீர் முதலிய உறுப்புகளைப் பெற்று வருகின்ற பாக்கள் வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என கான்கு வகைப்படும். 'மருட்டா என ஒன்றும் உண்டு. இந்த நான்கு பாக்களும் உள்ள ஓசை முறையே செப்பல், அகவல், துள்ளல், துரங்கல் எனப்படும். யாப்பின் இன்றியமையாமை: காம் ஒர் உரைநடையைப் படிக்கும்பொழுது, ம்ே மனம் ஒலிகளைப் பற்றிக் கவலை கொள்ளுவதில்லை. அறிவுக்கு மட்டிலும் ஏதோ செய்தி எட்டு கின்றது. இதனால்தான் நெடுந்தொலைவுப் பயணத்தின் பொழுது பெரிய புதினங்களைத் தொடர்ந்து படித்து முடித்து விடுகின்றோம். அவற்றிலுள்ள சொற்களும் ஒலிகளும் மறக்கப் பெறுகின்றன. அறிவுக்கு வேண்டிய செய்தி கிடைத்துவிடுவ தால் மனம் அமைதி பெறுகின்றது. இத்தகைய கெடுக் தொலைவுப் பயணத்தில் அதிைவண்டியில் கவிதையால் ஆன ஓர் இலக்கியத்தைப் படித்து முடிக்க முடியாது. அப்படி முடித் தாலும் கவிதையிலுள்ள உணர்ச்சியைப் பெறுதல் இயலாது.