பக்கம்:பாட்டுத் திறன்.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுத் திறன் 239 சொற்களால் பாடப்பெற்ற பாட்டேயாயினும் உரைகடைக் கும் பாட்டிற்கும் வேறுபாடு இருத்தலை அறியலாம். யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவ தெங்கும் காணோம் பாமரராய் விலங்குகளாய் உலகனைத்தும் இகழ்ச்சிசொலப் பான்மை கெட்டு காமமது தமிழரெனக் கொண்டிங்கு வாழ்ந்திடுதல் கன்றோ சொல்லீர்! தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும்.* என்ற பாரதியாரின் பாடலில் எளிய சொற்களே உள்ளன. எனினும், அவை உணர்ச்சிக்கும் யாப்புக்கும் ஏற்றவாறு அமைந்து விளங்குவதைக் காணலாம். இங்ங்னமே, இராமலிங்க அடிகள் பாடியுள்ள எண்ணற்ற பாடல்களில் எளிய சொற்கள் அமைந்திருப்பினும் அவை யாப்புக்குக் கட்டுப்பட்டு உணர்ச்சி பொங்கி வழிவதற்கேற்றவாறு அமைந்து திகழ்கின்றன. இன்னும் கும்மி, சிந்து முதலிய புதிய பாடல் வகைகள் பாமர மக்கள் இதயத்தையும் கொள்ளைகொண்டு அழியா வாழ்வு பெற்றுத் தமிழ்க்கவிதை யுலகிற்கு வளத்தை நல்குகின்றன. 47. பாரதியார் : தமிழ்,