பக்கம்:பாட்டுத் திறன்.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244 பாட்டுத் திறன் என்பதில் காதலை நிலைக்களனாகக் கொண்டு உவமை எழுந் துள்ளது. காதல் என்பது, நலனும் (அழகும்) வலியும் இல்லாத நிலையிலும் காதல் மிகுதியால் அவையுள்ளனவாகக் கொண்டு உரைப்பது. ஈண்டு எடுத்துக்காட்டியுள்ள உவமையில் தாய் தன் மகளிடத்தே கொண்டுள்ள பேரன்பு காரணமாக, பாவை யினை யொத்த பலரும் ஆராயத்தக்க மாண்பமைந்த என் மகளது வனப்பு' எனக் கூறியுள்ளதைக் காண்க. அரிமா வன்ன அணங்குடைத் துப்பிள் திருமாவளவன்' என்பது வலிபற்றித் தோன்றிய உவமையாகும். வலி என்பது, ஒரு பொருளுக்குத் தன் தன்மையால் உளதாகிய ஆற்றல். ஈண்டுச் சுட்டிய உவமையில் திருமாவளவனாகிய வேந்த னிடத்தே அமைந்துள்ள வலிமை காரணமாக அவனுக்குச் சிங்க ஏற்றை உவமை கூறியதாகலின் இதன் கிலைக்களன் வலிமை என்பது இனிது விளங்கும். மேலும், சிறப்பு நலன் காதல் வலி என்னும் கான்கையும் அடிப்படையாகக் கொண்டன்றி எத்தகைய உவமமும் பிறவாது என்பது கருத்தாதல் அறிதற்பாலது. ஒரு பொருளின் இழிவு கூறுவார் உவமத்தால் அதனது இயல்பு தோன்றக் கூறுதல் இயல்பு. கிழக்கிடு பொருள் எனப்படும் அவ்விழிபும் உவமத்தின் கிலைக்களங்களுள் ஒன்றாகக் கொள்ளப்பெறும். கிழக்கிடு பொருள் என்பது, கீழ்ப்படுக்கப்படும் பொருள். அரவு நுங்கு மதியின் துதலொளி கர்ப்பு:19 - என்ற அகப்பாட்டடிகளில் பிரிவிடை வேறுபட்டு வருந்தும் தலை மகளது நுதலின் ஒளியிழந்த கிலையினைக் கூறுவார், இராகு என்னும் பாம்பினால் விழுங்கப்பட்டு ஒளியிழந்த திங்களை அதற்கு உவமை கூறினமையின், இது கிழக்கிடு பொருள் நிலைக் களமாகப் பிறந்த உவமையாயிற்று. எனவே, சிறப்பு நலன் காதல் வலி என முற்கூறிய நான்கினோடு கிழக்கிடு பொருளும் சேர்ந்து உவமத்தின் கிலைக்களம் ஐந்தாகக் கொள்ளப்பெறு தலும் பொருந்தும் எனக் கூறுவர் தொல்காப்பியர். 9. பட்டிய்ை-வரி 298-299 10. அகம்-318.