பக்கம்:பாட்டுத் திறன்.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரட்டுத்-திறன் 345 உவமையணி எல்லாக் கவிஞரும் எளிதாகக் கையாளக் கூடிய தாக இருப்பினும், அவரவர் திறமைக்கும் அறிவிற்கும் ஏற்பப் பற்பல இயல்புகளை உள்ளடக்கிக் கூறுவதால் தனிப்பட்ட கவி ஞனின் கவிதை சிறப்படைகின்றது. உவமானம் கூறும் பொரு ளுக்குத் தரும் அடைமொழிகளால் உவமேயம் செய்யப்பெறும் பொருளுக்குச் சிறப்பளித்தலும், இதனை மாற்றிச் செய்தலும் தனிப்பட்ட கவிஞனின் திறமைக்கேற்ற சான்றாகும். எடுத்துக் கிாடடாக, மாரி இரவில் மரங்கவிழ் பொழுதின் ஆர் அஞர் உற்ற நெஞ்சமொடு ஒராங்குக் கண்இல் ஊமன் கடற்பட் டாங்கு வரை அளங் தறியாத் திரைஅரு நீத்தத்து அவல மறுசுழி மறுகலின் தவலே கன்றுமன் தகுதியும் அதுவே: ' என்ற பெருஞ்சித்திரனாரின் பாடற் பகுதியைக் காண்போம். பரிசில் வேண்டிச் செல்வோருக்கெல்லாம் புலவர்களுக்கு அவரவர் தகுதியறிந்து வரையாது கொடுத்துவந்த வெளிமான் என்ற அரசன் இறந்தபொழுது பெருஞ்சித்திரனார் பெருந்துயரால் வருந்தி நெஞ்சம் பிளவுபட்டு கைந்துபாடிய பாடலின் இறுதிப் பகுதி இது. கண்ணில்லாத ஊமையன் ஒருவன் தான் ஏறியிருந்த மரக்கலங் கவிழக் கடல்நீரில் அமிழுங்கால் பட்ட துயரினை எடுத்துக் காட்டித் தன் துயரின் அளவினைப் புலப்படுத்து கின்றார் புலவர். - ஊமையரா யிருப்பவர்க்கு வாய் பேசுதல் இயலாமையுடன் காதும் கேளாது; பிறர் பேசுவனவற்றைக் கேட்க முடியாமை யாலும், பிறருடன் தாம் ஒன்றையும் பேசுதல் கூடாமையாலும் அவர் படுக் துயர் இவ்வளவு அவ்வளவு என்று சொல்லமுடியாது. வாயும் காதும் இல்லாதொழியினும், கண்ணாவது இருப்பின், பிறர் கூறுவனவற்றை அவர்கள் செய்யும் குறிகளினாலாயி னும் கண்டு கொள்ளலாம்; தமது கருத்தையும் அங்ங்னமே குறிகளாலேயே தெரிவித்தல் இயலும். ஆனால், கண்பார்வையை யும் ஒருங்கு இழந்த ஊமையரோ எவரையும் எதனையும் காண்டலும் இயலாது; எவரோடும் பேசுதலும் இயலாது; பிறர் கூறுவதைக் கேட்டலும் இயலாது. இத்தகைய ஊமையர் தமக் 11. புறம்-238,