பக்கம்:பாட்டுத் திறன்.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

245 பாட்டுத் திறன் குரியவர் துணையை முழுதும் பெற்றே தமது வாழ்நாளைச் சொல்லொணாப் பெருந்துன்பத்தில் கழிக்க வேண்டியவர்கள். இத்தகைய நிலையிலுள்ள கண்ணில் ஊமையர் பகற் காலத் தில் தாம் எறியிருந்த மரக்கலம் கவிழப்பெற்றாலும், அதனுள் அழுந்தாமல் தப்புதல் அரிது. ஏனெனில், அருகில் ஏதாவது மரத்துண்டு மிதந்தாலும் அவர்களுக்குத் தெரியாது. அங்ஙனம் மிதக்கும் துண்டொன்றினைப் பற்றிக் கொண்டுய்யுமாறு சேய்மையிலிருந்து யாராவது கூவினாலும் அதைக் கேட்கவும் முடியாது. தமக்கு உதவுமாறு சேய்மையிலுள்ளோரைக் கூவி யமுைத்தலும் அவர்களால் இயலாது. எனவே, இத்தகைய ஊமையர் தப்புதல் மிகவும் அரிதேயாகும். மரக்கலம் கவிழ்ந்தது பகற்காலமாயிருப்பின் அண்மையிலோ சேய்மையிலோ இருப்பவர்கள் அவரது கிலையினைக் கண்டு இரங்கி நீக்திவந்து அவரைக் கைகொடுத் தெடுத்துத் தப்புவித்த லும் ஒரோவழிக் கைகூடினாலும் கூடலாம். ஆனால், அது கவிழ்ந்தது இரவுக் காலமாயினமையின் அவ்வூமையரின் கிலை யினைக் கண்டு பிறர் அருகு வந்து அவருக்குத் துணைசெய்ய இய லாது; பால் போல் நிலவு காயும் இரவாக இருப்பினும், யாராவது வருவதற்கு வாய்ப்பு ஏற்படலாம். மற்று, நிலவொளியும் மறை பட்ட மழைக் காலத் திரவாதலின், கடலில் தத்தளிக்கும் அவ்வூமையரின் கிலையை அயலவர் கண்டு இரங்கிவந்து அவர்க்குத் துணைபுரிதல் எவ்வாற்றானும் இயலாது. எனவே, ஒரு சிறு துணையும் அற்று, தாம் தம் உயிர் இழத்தலைத் திண்னமாய் உணர்ந்த கண்ணில் ஊமர் கடற்பட்ட துன்பத்தின் மிகுதி உணருந்தோறும் உணருங் தோறும் மிகவும் திகில் கொள்ளத் தக்கதாய், அளவிடப்படாததாய், இருத்தல் உணர்வொருங்கிப் பார்ப்பவர் எவர்க்கும் நன்கு விளங்கம் L’FGV.:#} இன்னும், மரக்கலம் உடைந்ததென்று கூறாமல், கவிழ்ந்தது என்று கூறிய நுட்பத்தினை ஆராயுங்கால், அவ்வுவமை பின்னும் சிறக்கின்றது. மரக்கலம் மலையில் தாக்கி உடைந்திருந்தால், உடைந்த அதன் துண்டு ஒன்றினை அவ்லுமனே பற்றிக்கொண்டு தப்புதலும் கூடும்; மற்று உடையாமற் கவிழ்ந்த மரக்கலத்தைக் கொண்டோ அவ்வாறு தப்புதல் ஒரு சிறிதும் ஏலாது என்பது ஆசிரியர் பெறவைத்த குறிப்பாகும். தமது வாழ்நாள் எல்லாம்