பக்கம்:பாட்டுத் திறன்.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250 பாட்டுத் திறன் மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயிற் பலர்காணத் தோன்றல் மதி "மதியே, மலர்போலும் கண்ணினையுடைய இந்த என் காதலியின் முகத்தை நீ யொக்க வேண்டுமாயின், இதுபோல் எனக்கு மட்டிலும் தோன்றுக; பலர்க்கும் தோன்றா தொழிக’ என்று கூறுகின்றான். இங்ங்னம் ஞாயிறு, திங்கள், நெஞ்சம் போன்ற அஃறிணைப் பொருள்கள், சொல்லுக போலவும், கேட்குக போலவும் சொல்லியாங்கு அமையும்' திறத்தைத் தொல் காப்பியர் குறிப்பிடுவர். மேலும் அவர், உயிர் இல்லாதபொருள் களை உயிர் உள்ளன போலவும், உணர்வு இல்லாத பொருள் களை உணர்வுடையன போலவும் கவிஞர்கள் கற்பனை செய்வர் என்றும் எடுத்துக்காட்டுகின்றார். உறுப்புடை யதுபோல் உணர்வுடை யதுபோல் மறுத்துரைப் பதுபோல் கெஞ்சொடு புணர்த்தும் சொல்லா மரபி னவற்றொடு கெழீஇச் செய்யா மரபின் தொழிற்படுத் தடக்கியும் அவரவர் உறுபிணி தமபோல் சேர்த்தியும் அறிவும் புலனும் வேறுபட கிறீஇ இரு பெயர் மூன்றும் உரிய வாக உவம வாயிற் படுத்தலும் உவமம் ஒன்றிடத்து இருவர்க்கும் உரியபாற் கிளவி என்ற நூற்பாவின் பகுதியைக் காண்க : அதற்கு அவர் மேற்கோள் காட்டும் பாடல்களையும் படித்து மகிழ்க. இத்தகைய கற்பனை செய்யும் உணர்வுத்திறனை மேனாட்டுத் திறனாய்வாளர் personification என்ற ஓர் அணியாக உயர்த்திப் பேசுவர். பழந்தமிழ் நூல்களில் இத்தகைய பண்பினைப் பரக்கக் காணலாம். திருத்தக்கதேவர், கம்பன் போன்ற பெருங்கவிஞர் கள் படைத்துள்ள காவியங்களில் இத்தகைய பண்பு அமைந் துள்ளது. இராமனும் சீதையும் பிரிந்தபொழுதும், ஒருவரை யொருவர் கினைந்துகொண்டு புலம்பும் பொழுதும்அமைந்துள்ள பாடல்களைப் பயிலும்பொழுது இதனைக் காணலாம். 18. குறள் 1119. . * 1?. செய்யுளியல், நூற்.192 (இளம்). 18, பொருளியல்-ஆாற்.2. -