பக்கம்:பாட்டுத் திறன்.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

280 பாட்டுத் திறன் தலைவன் ஒருவன் நீண்டநாட்களாகக் களவு ஒழுக்கத்தில் ஒழுகி வருகின்றான். இரவிலும் பகலிலும் வந்து வந்து போகின் மான். இரவில் சந்திக்கும் இடத்தைப் இரவுக்குறி என்றும், பகலில் சந்திக்கும் இடத்தைப் பகற்குறி' என்றும் அகப் பொருள் இலக்கணம் கூறும். இவ்வாறு இரவிலும் பகலிலும் வந்துபோகும் தலைவனை விரைவில் பல்லோர் அறியத் தலைவிக்கு மனம் புரிவித்துக் கற்பு நெறியில் வாழ வைக்க வேண்டும் என்று கருதுகின்றாள் தோழி; தலைவியின் வாழ்வு செப்பமுற அமைய வேண்டும் என்ற கருத்துடையவள் அல்லவா இவள் தான் அடிக்கடி குறியிடம் அமைத்துக்கொடுத்தால் தலைவன் கற்பு நெறியில் ஒழுக மனமிசையான் என்று கருதி, அவ்வித வாயப்புகள் அமைத்துக்கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று எண்ணுகின்றாள். தான் அடிக்கடி நெருங்கிப் பழகும் தலைவனிடம் திடீரென்று முடியாது' என்று எப்படிச் சொல்லுவது? தன் கருத்தை நேர்முகமாகச் சொல்லாது குறிப் பாகப் பெறவைக்கிறாள்; இல்லை என்பதை இனிமையாகச் சொல்லுகின்றாள். ஒருநாள் தலைவன் இரவுக்குறியை நாடி வருகின்றான். அவன் வரும் வழியில் ஒரு பெரிய காட்டாறு உள்ளது. ஆற்றில் வெள்ளம் தலைகீழாகப் புரண்டு பெருக்கெடுத்து ஓடுகின்றது; நீரின் கிறம் தெரியாது மறையும்படி முதிர்ந்து விழுந்த மலர்கள் மூடிக் கிடக்கின்றன. ர்ேகிறம் கரப்ப ஊழ் உறுபு உதிர்ந்து பூமலர் களுலிய கடுவரல் கான்யாறு அது. அத்தகைய காட்டாற் றில் வெள்ளம் கரைகளில் மோதிச் சுழிகளுடன் மீளும்; அங்ங்னம் வெள்ளம் மோதும் கரைகளில் உள்ள கற்களில் முதலைகள் கங்கியிருக்கும். அன்றி வெள்ளமோ மதம்மீறி கிற்கும் களிற்றி யானையையும் இழுத்துச் செல்லும் வலியினையுடையது. அத்தகைய வெள்ளத்தினையுடைய ஆற்றினைக் கடந்துவரு கின்றான் தலைவன். தோழி அந்த அச்சத்தை விளைவிக்கும் சூழ்நிலையை அவனுக்கு எடுத்துக்காட்டி இதிலும் மக்கள் வருவார்களோ?' என்று வினவுகின்றாள். தலைவன் ஒருநாள் துன்பம் எய்தினாலும் மறுநாளே தலைவி உயிரை விட்டுவிடு வாள் என்று குறிப்பிடுகின்றாள். இடையூறு இல்லாத வழி களிலும் அடிக்கடி அங்குப் போய்வருபவர்கள் கூடத் தவறி. விழாமல் இருப்பதில்லையே என்று அவனுக்கு எடுத்துக்காட்டு