பக்கம்:பாட்டுத் திறன்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 பாட்டுத் திறன் அன்னை கூறினள் புன்னையது சிறப்பே, அம்ம! காணுதும், நும்மொடு நகையே விருந்திற் பாணர் விளரிசை கடுப்ப வலம்புரி வான்கோடு நரலும் இலங்குநீர்த் துறைகெழு கொண்க! நீ கல்கின் கிறைபடு நீழல் பிறவுமார் உளவே." (ஆயம் - தோழியர் கூட்டம், காழ் - விரை; அகைய - தோன்ற; துவ்வை-நுமது தமக்கை: விருந்தினர் பாணர்-புதிதாய் வந்த பாணர்; விளர்-இளையதாய (மெல்லிய); கடுப்ப - ஒப்ப; நரலும் ஒலிக்கும்; கொண்கன் - நெய்தல்கிலத் தலைவன்.) இப் பாடலில் புன்னைக்கு காணுதும் என்று கூறுவதால், அன்னை வளர்த்த புன்னையென்றும், அதனால் பல்காலும் அன்னைவருவள்’ என்றும் உடனுறை கூறிப் பகற்குறி மறுத்த வாறு காண்க. புன்னைக்கு காணுதும் என்பது கேர் பொருளா யினும் அன்னை அடிக்கடி வருவள் என்ற பொருள் அதினின்றும் பிறந்தமையை அறிக. சீவகசிந்தாமணியிலிருந்து ஓர் எடுத்துக்காட்டுத் தருவோம். சீவகன் பதுமையை மணந்து இரண்டு திங்கள் அவளோடு மகிழ் வுடன் காலங் கழிக்கின்றான். ஒருநாள் இரவில் பதுமை துரங்கிக் கொண்டிருக்கையில் சீவகன் பிரிந்து போய் விடு கின்றான். துயிலுணர்ந்த பதுமை சீவகனைக் காணாது தான் வளர்த்த கிளி, பூவை, அன்னம், மயில் முதலியவற்றை வினவி விடையொன்றும் பெறாது மிக்க துயர் உறுகின்றான். பிறகு பள்ளியறையில் எரிந்த விளக்கை வினவுகின்றாள்; மறுமொழி இல்லை. பிறகு குடகத்தையும் தோளணியையும் போக்குகின்றாள்; தன் முலைகொண்ட பேரணிகளைச் சிந்து கின்றாள்; கொங்கையின் கரிய கண்கள் சிவந்து கலங்கும்படி அடித்துக் கொள்கின்றாள். தாங்கினமைக்காகக் கண்ணை நெஞ் சாலே சீறுகின்றாள். இங்கிலையில் ஒரு பாடல்: அரக்குண் டாமரை யன்னதன் கண்மலர் விருத்திமாதர் விலக்க வெரீஇக்கொலோ வருத்த முற்றனள் என்றுகொன் மேகலை குரற்கொ டாது குலுங்கிக் குறைந்ததே.28 27. நற்றிணை 173, 28. 8 su s. 137 4.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாட்டுத்_திறன்.pdf/34&oldid=812761" இலிருந்து மீள்விக்கப்பட்டது