பக்கம்:பாட்டுத் திறன்.pdf/351

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

}40 பாட்டுத் திறன் அமைப்புகளும் எழுதியவற்றைப் பேணும் சாதனங்களாக அமைந்து விட்டன. செவிப்புலன் ஆட்சியை விடக் கட்புலனின் ஆட்சி மிகுந்து விட்டது. நினைவில் நிறுத்த வேண்டிய இன்றிய மையாமை இல்லாது போய் விட்டது. வாய்விட்டுப்படித்தல் குறைந்து வாய்க்குட் படித்தல் செல்வாக்கு அடைந்து விட்டது. இந்தச் சூழ்நிலையில் செய்யுள் வடிவம் செல்வாக்கிழந்து உரை {56ö) L_ வடிவம் உயர்ந்தோங்கிவிட்டது. மேனாட்டார் வருகைக்குப் பிறகு உரை நடை இலக்கியங்களாகப் புதினம், சிறு கதை ஆகியவை தோன்றி, வளர்ந்து, கிலைத்து கின்று விட்டன. இந்தநிலையில் கவிதையும் உரைநடையில் ஏன் இயங்கக் கூடாது? என்ற வினா எழத்தொடங்கியது.மேனாட்டு இலக்கியப் புரட்சியின் தாக்கம் ஆங்கிலக் கல்வியின் வாயிலாக நமக்குக் கிடைத்தது. மேனாடுகளில் இலக்கியப் புரட்சி : மேனாடுகளின் அண் மைக்காலத்து இலக்கிய வர மாற்றை கோக்கினால் கவிதை இலக் கியத்தின் யாப்பு வடிவம் ஆட்டங்கொண்டது தெளிவாகும். வளர்ந்து வரும் புதிய சமுதாயத்தின் சிந்தனை வளர்ச்சி வேகத்திற்கேற்பப் பழைய யாப்பு வடிவங்கள் இயைந்து கொடுக்க முடியாமல் தயங்கி நிற்பதைக் காண்கிறோம். இந்த வடிவங்களைத் தகர்த்தெறியவும், கவிதையில் புதிய வாக்கிய அமைப்பை (syntax) ஏற்கச் செய்யவும் புது முயற்சியாளர்கள் முன் வந்தனர்; செயலாற்றத் தொடங்கினர். மொழியைப் புது முறையில் செயற்படச் செய்தால்தான் வளர்ந்து வரும் கருத்துச் செல்வ வெளியீட்டிற்கு அஃது இயைந்து ஈடுகொடுக்க முடியும் என்று நம்பினர். இவர்கள் முயற்சியால்தான் வசனகவிதை, கட்டற்ற கவிதை (Verse libre) வடிவங்கள் தோன்றலாயின. கவிதையின் உள் ள - க்க த் தி லும் புதுமைத்தன்மையைக் காண முடிந்தது. கடந்த அரை நூற்றாண்டுக் காலத்தில் ஸ்பானிஷ், செர்மன், உருவுதிய .ெ மா ழி க ளி ன் இலக்கணமரபில் கணிச மான நெகிழ்ச்சியும், மாற்றமும் ஏற்படலாயின. கந்தமிழ் மொழியிலும் பாரதியாரின்காலம் முதல் (இருபதாம் நூற்றாண் 1. விவரம் இந்நூலாசிரியரின் புதுக்கவிைதை: போக்கும் தோக்கும்" (பாரி நிலையம், சென்னை-600 108) என்ற நூலில் பக்(3-5) காண்க.