பக்கம்:பாட்டுத் திறன்.pdf/355

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

344 பாட்டுத் திறன் எங்கள் கவிதைகள் மனப்புகை வண்டிகளை மனித மனங்களின் வண்டவாளங்களைக் காட்டச் சுமந்து செல்லும் தண்டவாளர்கள். புராண உவமைகளால் புரிய வைத்தாலும் இவை புராணங்கள் அல்ல, புதிய ராகங்கள் பூயாளங்கள்: எங்கள் பேனா முனையில் பிறவாத சொற்கள் விக்கிரகம் ஆகாத வெறும் கற்கள் இந்தக் கவிதைப் பகுதிகளை அறிமுகம் செய்து வைப்பதையே புதுக்கவிதையின் அறிமுகமாகக் கொள்ளலாம். இந்தப் புதுக் கவிஞர் தம் கவிஞர் குழாத்தையும் இனங் காட்டுகின்றார். வறுமைத் தீயிலும் கொடுமை பெல்சி"யிலும் எங்கள் சோதரர் எரிகிறபோது-காங்கள் ராஜபுத்திரப் பெண்களைப் போல் உடன் கட்டை ஏறுவதில்லை. கண்ணகிப் பெண்போல் ஊரைக் கொளுத்தும் நெருப்பை உளத்தில் வளர்க்கின்றோம். உங்கள் விழிப்பறவைகள் கூடுகளுக்கு உள்ளேயே சிறகடிக்கின்றன. எங்கள் கவிதைமொழிப் பறவைகளோ கூடுகள் தாண்டி எல்லைக்கோடுகள் தாண்டி உலக வீதியில் உலா வருகின்றன. சமாதான சகவாழ்வு சமதர்மம் உலக உறவு இவற்றுக் காக எங்கள் பேனா வாள்களின் முன்னர் தலைகுனியும்போதுதான் பூமியின் புதல்வர்களாய் காங்கள் கெஞ்சை உயர்த்தி கிமிர்ந்து கிற்கின்றோம். .ே ஊர்வலம் அறிமுகம் - பக் (13-15).