பக்கம்:பாட்டுத் திறன்.pdf/361

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல் 20 உருவம் இன்றைய கவிதை உலகில் புதுக்கவிதை ஒர் இலக்கிய இயக்கமாக உருப்பெற்றுள்ளதை எவரும் மறுத்தற்கில்லை. புதுக்கவிதையும் கவிதைதான்’ என்றும், கவிதை அன்று' என் றும் அறிஞர்களிடையே நடைபெறும் பட்டிமன்றம்' என்று முடியுமோ தெரியவில்லை. புதுக்கவிதைத் துறை இன்றைய தலைமுறையினரின் உணர்வு வெளிப்பாட்டு வடிவமாக அமைக் துள்ளதை இத்துறையில் தோன்றியுள்ள வெளியீட்டு எண்ணிக் கையின் பெருக்கும், நாள் வார பிறை திங்கள் இதழ்களிலும் சிறப்புமலர்களிலும் வெளிவரும் புதுக்கவிதைகளின் மிகுதியும் சான்றுகளாக அமைகின்றன. இங்கிலையில் புதுக்கவிதையின் உருவம் பற்றிய சில கருத்துகளை ஈண்டுக் காண்போம். ஒருநாமம் ஒருருவம் இல்லாத ஆண்டவனைப் போல்’ புதுக்கவிதைக்கும் உருவம் இல்லை என்று சிலர் மதிப்பிடுகின் றனர். இது தவறு. மரபுக் கவிதைகட்கு உள்ள இறுக்கமான கட்டுப்பாடுகள்-யாப்பு விதிகள்-புதுக்கவிதைகட்கு இல்லை என்பதால் இக்குழப்பம் எழுகின்றது. உருவச் சிறப்பு இல்லாத இலக்கியங்கள் இல்லை;அப்படியிருப்பவை இலக்கியங்கள் ஆகா. கவிதை இருக்கட்டும்; புதினம், கட்டுரை, சிறுகதை போன்ற உரை கடை இலக்கியங்கட்கும் உருவச் சிறப்பு உண்டு என்பதை இக்கால இலக்கியத்தை ஆழ்ந்து கற்போர் நன்கு அறிவர். ஆண் டவன் உருவத்தை வழிபாட்டிற்காகக் கலைஞர்கள் எவ்வாறு பல்வேறு விதமாகப் படைத்து மகிழ்கின்றார்களோ அங்கனம் கவிஞர்களும் கவிதைக்குப்பல்வேறு வடிவங்களை அமைத்து மகிழ் கின்றனர். பக்தர்கள் கலைஞர்கள் அமைத்த உருவங்களைத் தம் மனத்தில் அமைத்து வழிபாடுகளை கடத்துவதைப் போலவே, 1. திருவாச - திருத்தெள், 1.