பக்கம்:பாட்டுத் திறன்.pdf/413

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

402 பாட்டுத் திறன் கடலுள் வழியும் அமிர்தத் தாரை கடவுள் ஊன்றும் செங்கோல் மிக அழகான கவிதை. படிமத்தைத்தவிர இதில் வேறொன்றை யும் காண்பதற்கில்லை. வானவில்” என்ற கவிதை இயற்கை எழிலை இன்பம் ததும்பும் அழகு ஒழுக வருணிக்கின்றது. ஏழடுக்கு மாடியிதோ? விப்ஜியார்கள் இணைந்த சிறு மாநாடோ? இன்பகாதம் சூழுமெக்தன் காதலிக்கை வளைதுண்டாக தூக்கி எறிந்திட்ட ஒரு பாதி யி..தோ? கீழ்வானின் பிரசவமோ? வானப்பந்தல் கீழ்வண்ணக் குழல்விளக்கோ? இரவியென்னும் வாழ்வளிப்போன் துளிமழையாம் துரிகையால் வரைந்த ஒளிச் சித்திரமோ? வானவில்லே...! பல்வேறு உருவகங்களும்படிமங்களும் கவிதையை அற்புதப் படைப்பாக்கி விடுகின்றன.அடுத்து,துஇ பகற்பொழுதின் திரைப் படமோ? என்றும் தமயந்தியை நோக்கி (இரண்டாம் சுயம்வரம்) நளன் அரசத்தேரை விரைவாகச் செலுத்தி வருங்கால் களனின் திண்தோளிலிருந்து கழுவி விழுந்த மேலாடையோ? என்றும் மேனகையின் விரல் நகமோ? அகல்யாவின் புருவமிதோ? என்றெல்லாம் இந்த வில்லின் அழகு வருணிக்கப் படுகின்றது. கவிதையின் இறுதிப் பகுதி: ஆதித்தியத்தின் ஊர்வலமோ? கவனம் போட்டு அழிக்கின்ற எழிற்கோடோ? கனவுத் தேனில் நன்னத்தெடுத்த ஒருமுறுக்குத் துண்டோ தேவர் நடைபோடும் மேடையிதோ? அமுதக் கோலோ? கணப்பொழுதில் கவியூற்றுக் கண்திறக்கும் கவின்திறவு கோலிதுவோ? கவிகள் நெஞ்சைப் பிணைக்கவரும் சங்கிலியோ? உருவம் பெற்றும் பேச்சறியா ஊமையனோ? விண்வால் தானோ? 22, மானிடகீதம் கூபக் 28,