பக்கம்:பாட்டுத் திறன்.pdf/439

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

金38 பாட்டுத் திறன் வெளியாவது போலவே, உறக்க நிலையில் கனவிலும் வெளிப் படுத்துவதே இங்கனம் நிகழ்வதற்குக் காரணமாகும். "இட் உணர்வு ஓர் இடையறாத வெள்ளம் போன்றது.அது தடைப்படுவதால்தான் ஆழ் உணர்வு ஏற்படக் காரணமாகின் றது. ஆம் உணர்வுக்கும் (கனவிலி நிலைக்கும்)கனவு விலைக்கும் இடையில் செயற்படும் நிலை ஒரு தடை நிலையம் (check post) போல் செயற்படுகின்றது. இதன் தடையால்தான் தடைப்பட்ட உணர்ச்சிகள் கனவு நிலைக்கு வர முடிவதில்லை.இத்தடை சற்று ஒய்ந்திருக்கும் பொழுது அடக்கப் பெற்ற உணர்ச்சி தலைகாட்டு கின்றது; வெளியேயும் வருகின்றது. அடக்கப் பெற்ற உணர்ச்சிக்கும் உணர்வு நிலைக்குமுள்ள முரண்பாட்டைச் சிக்கல் (complex) என்று குறிப்பர் உளவிய லார். ஃபிராய்டு இதனைப் பலவகையாகப் பிரித்து விளக்குவர்: கார்சிஸ் சிக்கல்' ஓடிபஸ் சிக்கல்' ஹெர்க்குலிஸ் சிக்கல்” அவற்றுட் சில. மனிதனுடைய உயர்ந்த ஆர்வங்கட் கெல்லாம் காரணமாயுள்ள இட்' என்ற உணர்ச்சி அடக்கப் பெறும் பொழுது அது வேறு வழிகளில் வெளியாகும்.இது கடவுள் பக்தி, நாட்டுப்பற்று,மனிதாபிமானம் போன்ற உணர்வுகளால் வெளிப் படக் கூடும். இதனை மடை மாற்றம் (sublimation) - தூய்மை யாக்கல்-என வழங்குவர் ஃபிராய்டு. தான் விரும்பும் பெண் தன்னைத் தகுதி இல்லாதவனென்று கருதினால் அடக்கப்பெற்ற ஆசை தாழ்வுச்சிக்கலாக (Interiority complex), வடிவெடுத்து ஆழ்மன்த்தில் மறைந்து விடுகின்றது. இவன் முயன்று பலதுறை களில் செயல்ாற்றித் தன்தகுதியை வெளிப்படுத்த முயலும்போது இஃது உயர்வுச் சிக்கலாகத் தோன்றும். சிக்கல்கள் தீரவேண்டு மானால் அவற்றை கனவு சிலைக்குக் கொண்டு வருதல்வேண்டும். இவ்வாறு முயலுவதே ஃபிராய்டின் மனநோயின் ஆய்வு முறை ஆகும். இஃது உளப் பகுப்பு ஆய்வு (Psycho analysis) என்று திரு காமம் பெறுகின்றது. மனநோயைக் குணப் படுத்தும் முறை மன 1. தன்னைத்தானே மிதமிஞ்சி விரும்புவதற்குக் காணமாக இருப்பது. இஃது அடக்கப் பெற்ற ஆசையால் வருவது. இத்தகைய சிக்கலைக் கொண்ட மனமுடையோர் பிறரோடு பழகவும் விரும்பார். 2. தாய் மீது அளவு மீறிய அன்பு . இதுவும் அடக்கப் பெற்; ஆசை யால் வருவது: 8. எல்லோரையும அ. க.க ஆள வேண்டும் என்ற ஆசை,