பக்கம்:பாட்டுத் திறன்.pdf/438

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுத் திறன் 42? ஆகிய இயக்கங்கள் சிறிது காலம் தீவிரத் தன்மையுடன் இயங்கி மறைந்தன. ஆனால் இவற்றின் தாக்கம் கலை, இலக்கியத் துறைகளில் கணிசமாக உணரப் பெற்றது, தனிமனிதத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு தனிப் பட்டவரின் ஆசைகள், கிராசைகள், சபலங்கள், ஏமாற்றங் கள், வக்கிரங்கள், பாலுணர்ச்சி விகாரங்கள், பிறப்பு. இறப்பு பற்றிய கருத்துகள் முதலியவை வெளிப்படுகின்றன: இந்த வகைப் பாடற் பொருளை அமைத்துத் தருவதற்கு வழிகாட்டியாக இருப்பவர் சிக்மண்ட்ஃபிராய்டு என்ற உளவியற் கலைஞர். இவர் கண்ட கொள்கை ஃபிராய்டிலம் என வழங்கு கின்றது. இஃது ஒர் உளவியற் கொள்கையாகும். நரம்பு கோய் ஆராயச்சியின் விளைவாக எழுந்தது இக்கொள்கை. இது முற்றிலும் அகவயமானது: மனிதன் இன்பத்தை காடுபவன். இன்பம் நாடும் உணர்ச்சி இட் (id) என்றும், லிபிடோ (Listido) என்றும் வழங்கப்பெறும். இஃது இணைவிழைச்சுத் தன்மை யுடையது. மனிதனது இந்த அடிப்படையான ஆற்றல் அக இயக்கத்திற்கும் புற இயக்கத்திற்கும் அடிப்படையான இயக்க ஆற்றலாகும். - மனிதனது இன்பநாட்டத்திற்குத் தடையாக உள்ளவை சமு கக் கட்டுப் பாடுகள். அவை மனிதனின் இன்ப காட்டத்திற்குத் தடைச் சுவர்களாக-முள்வேலிகளாக- அமைந்துள்ளன. இந்த இன்ப நாட்டம் தடுக்கப் பெறுங்கால் அது மறைந்து விடுவ தில்லை. அது கனவு கிலையிலிருந்து கனவடி நிலையையும் {sub-conscious level) & Torly. Sørðað #5060,3653 (unconscious ievel) சென்று விடுகின்றது. இவ்வாறு பல தரப்பட்ட ஆசை களால் உருவானதுதான் ஆழ் மனம் என்பது. சில ஆசைகள். தவறானவை என்ற சமூகக் காரணங்களால் நிறைவேறாமல் போனால், இவை ஆழ் மனத்திற்குள் சென்று புதைந்து விடும்; அமயம் நேரிடுங்கால் இவை கனவு நிலைக்குத் தெரியாமல் மாறு வேடத்துடன் வெளிப்படும். இவ்வாறு கனவு நிலைக்கும் கன விலி கிலைக்கும் ஒரு போராட்டமே சிகழும். கனவு கிலையில் காம் காரணமறியாமல் செயற்படுவது போலவே,கனவிலும் கூட அங்ங்னமே பல நிகழ்ச்சிகள் தோன்று வதைக் காணலாம். விழித்திருக்கும் நிலையில் கனவிலி நிலையி லிருந்து-ஆழ்மனத்திலிருந்து-அடக்கப் பெற்ற உணர்ச்சி