பக்கம்:பாட்டுத் திறன்.pdf/441

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

శ్రీశ్రీ{ பாட்டுத் திறன் இத்தகைய அது பவமண்டலம் கனவு உளம் அறியாவண்ணம் மிகுந்த ஆற்றலுடன் செயலாற்றுவதே சிக்கல் (Complex) அல்லது உளக் கோட்டம் ஆகும். தலைமுறை தலைமுறை யாக எழுந்த அநுபவத்தின் பயனாக சம்மிடையே பதிந்து வங்த பழக்க வழக்கங்கள் இவ்வாறு இயக்க வடிவ எண்ணங் களாகவே நினைவிற்கு வந்து இயக்க வடிவமாகவே இயங்கு கின்றன. இவற்றில் கனவு உளத்தையும் கனவிலி உளமே ஆண்டு வருகின்றது. ஒரு சிறு சொல்லோ அல்லது எண்ணமோ ஆற்றல் பொங்கி எழும் நடுவிட ஊற்றாக விளங்குகின்றது. ஃபிராய்டின் கொள்கையில் மனித நடத்தைக் கெல்லாம் உந்து விசையாக இருப்பது பாலுந்தல் ஆற்றல் (Sexual energy) என்ற கருத்திற்குப் பெரிய எதிர்ப்புத்தோன்றியது. ஃபிராய்டின் சீடர்களான புங் ஆட்லர் முதலியோர் அதே அடிப்படையைக் கொண்டே அவ்வுணர்ச்சிக்குப் பல வாய்க்கால்கள் இருப்பதாகக் கூறிவிளக்குகின்றனர். அறிவு ஆசை, ஆதிக்க ஆசை முதலியன வும்.அதில் அடங்கும் என்கின்றனர். ஆய்வுமுறையிலும் அதிகக் கற்பனைகளை நீக்கி மட்டுப் படுத்தினர். சி. ஜே. யுங்க் என்பார், ஒருவரின் கனவிலியுலகத்தில் அவரது மூதாதையர் அநுபவங் களும் அடைப்பட்டிருப்பதாகக் கூறுவர். மனிதன் இறந்து போன தன் மூதாதையரையும் தன் ஆற்றல்களையும் இணைக் கும் ஒரு சங்கிலி போன்றவன். ஒருவரது உடலமைப்பு அவரது மூதாதையருடைய உடலமைப்பை அடிப்படையாகக் கொண் டிருப்பதைப் போலவே, அவரது உளமும் அவரது மூதாதை யளின் உளத்தை அடிப்படையாகக் கொண்டது' என்பது யுங்கின் விளக்கம். இங்த கனவிலியுளத்தின் வளர்ச்சியும் மாற்றமும் மனத்தினுள் கடைபெறும் செயல் (Endothernic process) என்று வழங்கப் பெறும். இது நடைபெறுவது மக்குக் தெரியாது; கனவிலி கிலையில் இது நடைபெறுகின்றது. ஃபிராய்டின் கோள்கையாகிய மூலதத்துவத்தினின்றும் காலப்போக்கிற்கு ஏற்றவாறு சில மாறுதல்களைக் கொண்டு கிளைத்து எழுந்தவை தாம் மீமெய்ம்மையியல் (Su realism, ) இருப்பியல் (Existentialism) என்ற கொள்கைகள்: மீமேய்ம்மை யியல் முதல் உலகப் பெரும் போருக்குப் பின் முதிர்த்துவிட்ட முரண்பாடுகளின் விளைவான கருத்துகளை அடிப்படையாகக் கொண்டது. அதன் தத்துவ அடிப்படைகள் ஃபிராய்டின்