பக்கம்:பாட்டுத் திறன்.pdf/458

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

448 பாட்டுத் திறன் திண்டல்...முதலியவை தருபவை இவற்றுள் சிலவற்றைக் காணலாம். தமிழ்ப் பற்று' என்ற தலைப்பில் ஒரு கவிதை தனித்தமிழ்ப் பற்றாளர்களைக் கிண்டல் செய்கின்றது. தேவ பாஷையில் தேர்ச்சி மிக்க சாஸ்திரி ஒருவர் சபையில் சொன்னார்: ஜாதி வேண்டும் ஜாதி வேண்டும்.' உடனே சீறி ஒரு தமிழ் மறவர். ஒங்கிக் கத்தினார்: ஒய் ஒய், இனி நீர் ஐாதி வேண்டும் என்றால் - பொறுமையாக இருக்க முடியாது என்னால்... சரியாய்ச் சாதி வேண்டும் என்றே சாற்றும் 'ஜாதி என்ற சொல்லுக்குச் சரியான தமிழ்ச் சொல்லை கண்டறிய முடியாத சிலையைக் கிண்டல் செய்வதைக் காண்க. "மாத்திரை' என்ற தலைப்பில் உள்ள மற்றொரு கவிதையும் பண்டிதர்களைக் கிண்டல் செய்கின்றது. மயான வழியில் கான் கடந்து போகையில் மரபுவழிக் கவிதை யொன்றை மனனம் செய்து கொண்டு சென்றேன்! அந்தக் கவிதையில் எங்கோ ஒரிடத்தில் அரை மாத்திரை குறைவதாக என்னைத் துரத்தின ஏழெட்டுப் பண்டிதப் பிசாசுகள்! 9, ஊர்வலம் பக்.1ே 10. பூத்த வெள்ளி பக்.78