பக்கம்:பாட்டுத் திறன்.pdf/474

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

464 பாட்டுத் திறன் வயது வழங்கிய வாய்ப்பில் அமர்ந்து சிலிர்க்கும் இவர்கள் இருவரைக் கட்டிலேற ஊதி முழக்கி ஊர் கூட்டும் இவர்கள் இருளில் ரகசியமாய் வெட்கி மருவி மயங்கும் இவர்கள் பிறகு தவழவிட்டு ஊரெல்லாம் பெருமை உரைக்கும் இவர்கள் எல்லாம் இவர்கள் தான்-வேறுயார் சொல்வார்கள்? கூடாதாம் பச்சையம். எழுதுவன எல்லாம் எழுத்தாளனின் சொந்த அநுபவம் ஆகுமா? என்று வினவும் பாங்கில், எழுத்திலே பச்சை என்றால் எழுத்தாளன் மனசிலே பச்சை என்றாகுமா? நாடகத்தில் பாத்திரங்கள் பேச்செல்லாம் ஆசிரியர் பேச்சா? கரகம்’ எனது நரகமா? நரகத் தலைவனின் கரகமா?’ என்றெல்லாம் வினாக் களை எழுப்பி விட்டுக் கவிஞரே பேசுகின்றார்: பலவகை ஆறுகள் எனக்குள் இருக்கும் கடலில் கலக்கும்; எழுபவை கடல் முகில், அருவிக்கு வெறுப்பில்லை வருவோரைக் குளிப்பாட்டும் காற்றுக்குத் தடுப்பில்லை காற்றெங்கும் புகுந்து விடும் tயிழுத்த காற்றணுக்கள் கானிழுத்த காற்றணுக்கள் கதிரொளியில் மறைப்பில்லை, கதிரொளியில் பச்சையில்லை படைக்கின்றேன் பச்சையத்தால், கடப்பில் விகழ்வது படைப்பில் இடம் பெறும். கடப்பில் விகழ்வது' என்ன? அவரே மறுமொழியும் தருகின்றார்: பற்பசையில் முத்துச்சரம் எண்ணெயில் தாழ் கூந்தல் செருப்பில் மலாடி உடையில் சிலையுரு பவுகளில் பட்டிழகு