பக்கம்:பாட்டுத் திறன்.pdf/477

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுத் திறன் 46? என்றாலும் நடிப்ப தெல்லாம் நடிப்பா? கலப்பிலா கடிப்பா? சற்றும் இமைப்பிலா விழிப்புடன் நடிகன் நடிக்கட்டுமே, ஒரு முறை கூடவா உணர்வுடன் புணர்ந்து தன்னை மறக்க மாட்டான்? மறந்து கலக்க மாட்டான்? நடிப்பு மறைந்து சொந்தம் கலப்பதை அறிவது அருமை; கலப்பது அறிதலை புறவயப் பார்வை. அழிப்பதில்லை அகத்தை; தப்பிப் பிழைப் பதில்லை கவிஞன் தன்கிழல். முத்தாய்ப்பாக, தொடுவானம் கரை விழியில் அரை விட்டம் கடல் கடுவில் முழுவட்டம். என்று கூறிப் படிப்போரைச்சிந்திக்க வைத்து விடுகின்றார். கவிஞர். அடுத்து, வரும் போகும் என்ற கவிதையையும் காண் போம். இந்த நெடுங் கவிதையில் காணப் பெறும் சூழ்நிலையும் நகரச் சூழ்நிலைதான். ஆனால் கவிதைத் தலைவன் அலுவலகத் தில் பணி புரிந்துவிட்டு வீடு சேரும் ஆவலுடன் வந்து பேருந்துக் காகக் காத்து கிற்கும் ஒருவன்; இளமை குன்றியவன். இவன் காண்கின்ற காட்சிகளும், அவை அவனுள்ளே எழுப்புகின்ற எண்ணங்களும் கவிதையில் அற்புதமாக எடுத்துக்காட்டப் பெறுகின்றன. காதடைக்கும் இரைச்சலுடன் டவுன் பஸ்கள் வரும்போகும் என்று கவிதை தொடங்குகின்றது. இந்த இரு அடிகளும் கவிதையினூடே அடிக்கடி இடைப் பிறவரலாக வந்து வந்து கவிதை துவலும் பொருளுக்கு ஏற்ற ஏற்ற இடங்களில் அழுத்தம் தந்து அழகொளி வீசுகின்றன. ககரத்தில் பேருந்து விற்கும் இடத்தின் வருணனை இது: பணிபுரிந்து மிகக்களைத்து மனைக்கேக வழிதேடி வேர்வைத்துளி பல்லிளிக்கச் சோர்வோடும் உடல்வளைத்துச் சுற்றி கிற்கும் ஒருகும்பல்; பூத்துவிட்ட விழிகுலுக்கி