பக்கம்:பாட்டுத் திறன்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38. பாட்டுத் திறன் குருதியோட்டம் முதலிய உடலின் செயல்களை உளவியல் பயில் வோரும், உள்ளக் கிளர்ச்சி, சிந்தனை போன்ற உள்ளத்தின் செயல்களை உடலியல் பயில்வோரும் ஆராய்கின்றனர். எனவே, உடலும் உள்ளமும் ஒரே உயிரியின் இரண்டு கூறுகள் என்று தற்கால அறிஞர்கள் முடிவுகட்டியுள்ளனர். உடலின் பகுதிகள் : கம்முடைய உடலில் தனிப்பட்ட பல் கோடி உயிரணுக்கள் உள. உயிரணு" என்பது உடலிலுள்ள மிகச் சிறிய உயிருள்ள பகுதியாகும். உடலின் ஒவ்வொரு பகுதி யிலும் பல்வேறு வித உயிரணுக்கள் உள்ளன. ஒரேவிதமான பண்புகளைக்கொண்டு ஒரே மாதிரியாகச் செயற்படும் உயிரணுக் கள் ஒன்று சேர்ந்து ஓர் உயிரணுத் தொகுப்பு ஆகின்றது. இக் தொகுப்பினை இழையம்' என்று வழங்குவர். பல இழையங்கள் ஒருங்கு கூடிக் குறிப்பிட்ட ஒரு செயலை இயற்றுகின்றன. இழையத் தொகுதிகளை உறுப்புகள் என்பர். எடுத்துக் காட்டாக உடலிலுள்ள இதயம் ஓர் உறுப்பு: கல்லீரல் மற்றோர் உறுப்பு. பண்புகளால் ஒன்றோடொன்று தொடர்புள்ள உறுப்பு களின் தொகுதி மண்டலம்' எனப்படும். எ-டு. மூச்சுறுப்பு மண்டலம், தசை மண்டலம். இம்மண்டலங்கள் உடலின் முக்கிய செயல் ஒன்றற்கு அடிப்படையாக இருக்கக் கூடியவை. கம்மிடம் இம்மாதிரியான தொடர்புடைய பல மண்டலங்கள் அமைக் துள்ளன. இரண்டுவகை உறுப்புகள்: நமது உடலிலுள்ள உறுப்புகளை இரண்டு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம். ஒன்று: விலை சிறுத் தும் உறுப்புகள்'. இவை உடலினுள் செயற்பட்டு இம்முடைய உடல் நலம், வளர்ச்சி ஆகியவற்றை நிலை சிறுத்துகின்றன. சுவாசித்தல், கழிவுப் பொருள்களை அகற்றுதல், செரிமானம் ஆதல் போன்ற செயல்களை இயற்றும் உறுப்புகள் இப்பகுதி யில் அடங்கும்.இரண்டு: பொருத்தமுறும் உறுப்புகள். நாம் கம் தேவைக்காகச் சூழ்நிலையின் தடங்கல்களை மேற்கொள்ளுமாறு இவை செயல் புரிகின்றன. ஐம்பொறிகள், பிற பொறிகள், 9. s-uâf-Organism. 10. 2-uorgga-Cell 11. Asopusú -Tissue 13. *-* - Organ is. Issors_o - System. 14. és» o 83"#žith a-stiúr; *sir - Maintaining organs. 15. பொருத்தமுறும் உறுப்புகள் Adjusting organs.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாட்டுத்_திறன்.pdf/50&oldid=813102" இலிருந்து மீள்விக்கப்பட்டது