பக்கம்:பாட்டுத் திறன்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுத் திறன் 59 இடைவினை புரிவதன் காரணமாகவே வளர்ச்சியுற்றவை. எனவே, அமைப்பு என்பது தனியாளின் எல்லாக் குடிவழிக் கூறுகளும், தனியாளிடம் கடந்தகாலச் சூழ்நிலை இயற்றிய ைேலயான விளைவுகளும் அடங்கியதொரு பிண்டமாகும். தான் கற்றவை, தன்னுடைய அறிவு, பழக்கங்கள், திறன்கள் முதலி யவை அனைத்தும் அவனுடைய அமைப்பில் அடங்கிக் கிடக் கின்றன. தான் கற்றவையனைத்தும் மூளையின் அமைப்பினைச் சிறிது மாற்றி அங்கு மடிப்புகளாகப் பதிகின்றன. இங்ங்ணமே, அவனுடைய ஆற்றல்களும் ஆளுமைப் பண்புக் கூறுகளும்" அவனுடைய அமைப்பில் அடங்குகின்றன. ஒருவருடைய அக அமைப்பினைப் பற்றி நாம் அதிகமாகச் சோதிக்க முடியாதென் பதும், அவருடைய வீலையான சிறப்பியல்புகள்" அவருடைய கடத்தையினின்றே உறுதி செய்யப் பெறல் வேண்டும் என்பதும் உண்மையே. எனவே, நடைமுறையில் இந்த நிலையான சிறப் பியல்புகளையே காம் அமைப்பு என வழங்குகின்றோம். தனி யாள் கடந்த காலத்தில் பெற்ற இச் சிறப்பியல்புகளைக் கொண்டு ஒரு குறிப்பிட்ட துலங்கலைப் புரிந்தால்தான் அவை கிரந்தரமானவை என்று கருதலாம். இத்தகைய கிரந்தரமான சிறப்பியல்புகளைப் பற்றிய ஆராய்ச்சியே எதிர்காலத்தில் அவர் மேற்கொள்ளும் செயல்களை முற்கூறுவதற்கு வழியாக அமை கின்றது. - தற்காலிக நிலை: ஒருவர் எவ்வளவுதான் உற்சாகமுள்ள வராக இருப்பினும், அவர் ஒரு குறிப்பிட்ட சமயத்தில் சோம்ப் லாகவும் இருத்தல் கூடும். அச்சமயம் அவருடைய துலங்கல் சோம்பற்றன்மையுடையதாகவே இருக்கும். ஒருவருடைய பல்வேறு தற்காலிக கிலைகளில் சோம்பல் கிலையும் ஒன்று. இத்தகைய பல்வேறு தற்காலிக நிலைகளின்பொழுது அவர் ஏற்கும் தாண்டலுக்கு அவருடைய துலங்கல்களும் பல்வேறு விதமாக இருக்கும். ஒருவர் பசியுடன் இருக்கும்பொழுது, அட்டிலறையினின்றும் எழும் நறுமணத்தால் அவர் துலங்கு வதற்கும், உண்டு வயிறு நிறைந்த நிலையில் அதே மனத்தால் அவர் துலங்குவதற்கும் வேறுபாடு உண்டு அல்லவா? இங்ங்னமே களைத்திருக்கும் சிலை, ஓய்வு பெற்ற பிறகு உள்ள நிலை, 47. Qool-såee sor-Interaction. . 48, opé-Ability, 49. și, abso trăi usinuă s-pi-Personality trait. 59. g. på 3 us & H ssir-Characteristics,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாட்டுத்_திறன்.pdf/70&oldid=813163" இலிருந்து மீள்விக்கப்பட்டது