பக்கம்:பாட்டுத் திறன்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுத் திறன் 78 யாலும் உண்டாகும் இடுக்கண்களைத் தாங்க முடியாது. உயிர் வாழ்வதற்கே இது மிகவும் இன்றியமையாதது. இருமல் நோயால் இச்சுரப்பியின் புறணி சிதைவுற்றால் இஃது அடிசன் நோய்' என்ற ஒரு கோயை உண்டாக்குவதாக அறிந்துள்ளனர். தொடர்ந்தாற்போல் சோர்வு உண்டாதல், பாலுணர்ச்சியில் விருப்பமின்மை, குறைந்த வளர்-சிதை மாற்றம், தொற்று நோய்களை எதிர்த்து கிற்கும் ஆற்றல் குறைவு போன்றவை இந்நோயின் அறிகுறிகளாகும். மேலும், இக் கோயால் பீடிக்கப் பெற்றவர்களின் தோல் கருமைகிற மடைகின்றது; நோயாளி வெப்பத்தையோ குளிரையோ தாங்க முடியாது; அவனிடம் தாக்கமின்மையும் உண்டாகின்றது. கார்ட்டினைக் குத்திப் புகுத்தி இந்நோயினை நீக்கலாம். மாங்காய்ச் சுரப்பியின் புறணி அளவுக்கு மீறிச் செயற்பட்டால் இது ஆணிடமோ பெண்ணிடமோ ஆண்மைப் பண்புகளை அளவுக்கு மீறி உண்டாக்குகின்றது. பெண்ணிடம் மகளிர்க்குரிய இயல்புகளையும் வனப்பையும் குன்றச் செய்துவிடும். அவளுடைய குரல் தடித்து, மீசை தாடியையும் அவளிடம் தோற்றுவித்துவிடும். கணையம்? : இது மாங்காய்ச் சுரப்பிக்கு அருகேயுள்ளது. இதில் உள்ள லாங்கர் ஹன்ஸ் தீவுகள்" துரம்பிலாச் சுரப்பி யைப் போல் செயற்படுகின்றன. இவற்றில் ஊறும் இயக்கர்ே இன்சுலின்' என்பது. இச்சாறு நம் உடலிலுள்ள சருக்கரையின் பயனைக் கட்டுப்படுத்தும் முக்கிய கூறுகளில் ஒன்று. இஃதின்றி. உடலிலுள்ள சருக்கரை எரிந்து ஆற்றலை உண்டாக்க இயலாது. இன்சுலின் குறைவு ஏற்பட்டால், உணவிலுள்ள சருக்கரை குருதியோட்டத்தில் சேர்ந்து சிறுநீருடன் வெளியேறு கின்றது. இதுதான் நீரிழிவு நோயாளியின் கிலை. இன்சுலின் அளவுக்குமீறி ஊறினாலும் அது கவலை, அமைதியின்மை, மனச்சோர்வு போன்ற நிலைகளை விளைவிக்கின்றது. இப்பொழுது குருதியிலுள்ள சருக்கரையின் அளவு குறை கின்றது. குருதியின் சருக்கரையளவு மிகத் தாழ்ந்த நிலைக்குக் 42. sil-s sir G# ri Addison’s disease, 43. i. 65 or sist - The Pancreas. 44, work on so geo- Islets of Langarhans 45. Asirsredsir- Insulin.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாட்டுத்_திறன்.pdf/84&oldid=813193" இலிருந்து மீள்விக்கப்பட்டது