பக்கம்:பாட்டுப் பாடுவோம்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



அருமை நேரு


அருமை நேரு பிறந்தது

அலகா பாத்து நகரிலே.


இளைஞர் நேரு படித்தது

இங்கி லாந்து நாட்டிலே.


தீரர் நேரு வாழ்ந்தது

தில்லி நகரம் தன்னிலே.


இன்று நேரு வாழ்வது

எங்கள் பிஞ்சு நெஞ்சிலே!