உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாட்டும் கதையும்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சலவைத் தொழிலாளி - கந்தன்
சடைநாய் வளர்த்துவந்தான்
விலகிச் செல்லாமல் - அந்நாய்
வீட்டைச் சுற்றிவரும்


காலைப் பொழுதினிலே - கந்தன்
காலைச் சுற்றிவரும்
மாலைப் பொழுதினிலே - அவன்
மடியில் விளையாடும்


வாலைக் குழைத்துவரும் - அவனை
வாயால் நக்கவரும்
மேலே தாவிவிழும் - பக்கம்
மெல்லக் குதிபோடும்


அழுக்கு மூட்டையினை - நாளும்
ஆற்றுக் கேற்றிவரக்
கழுதை ஒன்றினையும் - கந்தன்
காத்து வளர்த்துவந்தான்

20