பக்கம்:பாட்டும் கதையும்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நாயின் விளையாட்டைக் - கழுதை
நாளும் பார்த்துவிட்டுப்
பாய்ந்து குதித்தொரு நாள் - கந்தன்
பக்கம் சென்றதுவாம்


காலைத் தூக்கியதாம் - அவன்
கழுத்தில் மோதியதாம்
வாலைக் கிளப்பியதாம் - உரக்க
வாயால் கத்தியதாம்


கையில் கோலெடுத்தான் - கந்தன்
காலை முரித்துவிட்டான்
மெய்யும் புண்ணாகக் கழுதை
மெத்த வருந்தியது.


கந்தன் ஒரு சலவைத் தொழிலாளி. அவன் அன்புடன் ஒரு சடை நாயையும், அழுக்கு மூட்டை சுமக்க ஒரு கழுதையையும் வளர்த்துவந்தான். நாய் மிகவும் நன்றியுள்ள விலங்கல்லவா? தனக்கு உணவிட்டுப் பாதுகாக்கும் கந்தனைக் கண்டவுடன் நாய் வாலை ஆட்டும்; அவன் காலைச் சுற்றிவரும்; அவன் மடியில் விளையாடும்; தன் நாவினால் அவனை நக்கும்.

21

பா--3