பக்கம்:பாட்டும் கதையும்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
"ஒன்று கண்ணே ஒன்று
உலக மெல்லாம் ஒன்று"

என்பதன் மூலம் உலக ஒருமைப்பாட்டையும்,

"அன்னையைப் போலொரு தெய்வம்-இந்த
அகிலத்தில் வேறெது மில்லை"
"தந்தைசொல் போலொரு நீதி- இந்தத்
தாரணி மீதினில் இல்லை”

என்ற வரிகளால் தாய் தந்தையரைப் போற்ற வேண்டிய தன்மையினையும் ஆசிரியர் எடுத்துரைத்துள்ள பாங்கு எண்ணி மகிழ்தற்கேற்றவையாம்.

கவிஞரின் சிறந்த சொல்லாட்சி நம்மை இறும்பூதடையச் செய்கிறது. குழந்தைகளைச் "சோலைக் குயில், சித்திரை நிலவு, தங்கச்சிலை, முத்துச்சரம்" என்றழைப்பதும்,

நிலவினை,"வெண்ணெய் உருண்டையாக, வெள்ளித் தட்டாகக்" காணுவதும் அதற்கேற்ற எடுத்துக் காட்டுகளாம்.

வரிக்கு வரி சிறப்புப் பெற்றுள்ள இந்நூல் குழந்தைகட்குக்

கனிப்பின் கூட்டல்
சோர்வின் கழித்தல்
பண்புகளின் பெருக்கல்
சுவைகளைப் பகுத்துத் தரும் வகுத்தல்

குழந்தைகட்கான இலக்கியங்கள் நம் நாட்டில் மிகுதியாகத் தோன்ற வேண்டுமென நல்லறிஞர்கள் எண்ணும் இவ்வேளையில் இந்நூலை வெளியிடுவதன் மூலம் வேலா பதிப்பகத்தார் குழந்தையுலகுக்குப் பெருந் தொண்டாற்றிய பேறு பெறுகின்றனர். இத்தகைய சுவைமிக்க நூல்கள் பல வெளியிடுவதன் மூலம் அவர்கள் தொண்டு மேலும் மலர வேண்டுமென உளமார வாழ்த்துகின்றேன்.

அன்பன்,

17--2-65

செல்லப்பன்