பக்கம்:பாட்டும் தொகையும்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. அகங்ானூறு

பழந்தமிழ் இலக்கியங்களைச் சங்க இலக்கியம் என்ற பெயரால் முன்னோர் வழங்கினர். அச் சங்க இலக்கியம் மேற்கணக்கு என்றும். கீழ்க்கணக்கு என்றும் இரு பிரிவாகக் கொள்ளப்படும். பாட்டும் தொகையும் மேற் கணக்காகும். பாட்டு என்பது பத்துப்பாட்டையும், தொகை என்பது எட்டுத்தொகை நூற்களையும் குறிக்கும்.

எட்டுத்தொகை நூற்களில் நற்றிணை, குறுந்தொகை, ஐங்கு றுநூறு, கலித்தொகை, அகநானுாறு ஆகிய ஐந்து நூற்களும் அகத்திணையைச் சார்ந்தவை; பதிற்றுப்பத்தும் புறநானுாறும் புறத்திணையைச் சார்ந்தவை. பரிபாடல் அகம், புறம் ஆகிய இரு கூறுகளையும் உள்ளடக்கி நிற்கிறது.

அகத்தே நிகழும் இன்பம் “அகப்பொருள்’ எனப்படும். அகப்பொருள் நூற்கள் பல தமிழில் இருப்பவும் ‘அகம்’ என்றே பெயரமைந்த நூல் தமிழில் அகநானூறு ஒன்றே யாகும். எட்டுத்தொகை நூற்கள் இவை இவை எனக் குறிப்பிடும் செய்யுளில் கற்றறிந்தோ ரேத்தும் கலியோ டகம்’ என்றும், கலியோடகம்’ என்றும் ஒடுக்கொடுத்துக் கலியோடு அகத்திணையும் சேர்த்துக் கூறப்பட்டிருத்தலின் அகநானூறு கற்றறிந்தோர் ஏத்தும் சிறப்பிற்கு உரியது என்பது பெறப்படுகின்றது. மேலும் எட்டுத்தொகை நூற்களுள் அடிவரையறையால் நீண்டன பிறவும் உளவாகவும் அகநானுாற்றிற்கே நெடுந் தொகை எனப்