பக்கம்:பாட்டும் தொகையும்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறநானூறு 143’

நிலையில் கொடுப்பதைக் கொடை போன்ற சொற்களால் குறிப்பர். இதில் இரப்பது என்பது இழிந்ததாகக் கருதினர் பழந்தமிழர். இதனால், தானே தனக்கு வேண்டியவற்றைத். தேடி வாழவேண்டும் என்ற தமிழர் கொள்கை புலனாகும்.

ஈயென இரத்தல் இழிந்தன்று; அதன் எதிர் ஈயேன் என்றல் அதனினும் இழிந்ததன்று கொள் எனக் கொடுத்தல் உயர்ந்ததன்று; அதன் எதிர் கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று தெள் நீர்ப் பரப்பின் இமிழ்திரைப் பெருங்கடல் உண்ணார் ஆகுப நீர்வேட் டாரே ஆவும் மாவும் சென்று உணக் கலங்கி சேற்றொடுபட்ட சிறுமைத்து ஆயினும் உண்நீர் மருங்கின் அதர் பல ஆகும் புள்ளும் பொழுதும் பழித்தல் அல்லதை உள்ளிச் சென்றோர் பழியலர்; அதனால் புலவேன்-வாழியர் ஓரி விசும்பில் கருவி வானம் போல வரையாது சுரக்கும் வள்ளியோய்! நின்னே...

- புறநானுாறு ; 204

ஒருவனிடம் சென்று இரத்தல் இழிவானது. அவன் மான மின்றி அவ்வாறு கேட்பதிலும் இழிவானது, தன்னிடம் கொடுக்கப் பொருள் இருந்தும் இல்லையென்று கூறி நிற்றல் ஒருவனுக்கு இதை வைத்துக்கொள்’ என்று கொடுப்பது மிகவும் உயர்ந்த பண்பாகும். தனக்கு வேண்டிய பொருள் தன்னிடம் இருக்கும்போது அவ்வாறு பெறாமல், வேறு ஒருவருக்கு வறியவருக்கு அது பயன் படட்டும் என்ற நன்னோக்கத்தில் அதை மறுப்பது அதை விட உயர்ந்த பண்பாகும். கடலில் எவ்வளவுதான் அதிக அளவில் நீர் நிறைந்திருப்பினும் அது யாருக்கும் குடிக்கப் பயன்படுவதில்லை. கலங்கிய சிறிய நீரையுடைய கிணறு நன்னிரைத் தருகின்றது. மழைபோன்ற வள்ளற்றன்மை கொண்டிருக்கவேண்டும் என்று கூறுகிறார்.