பக்கம்:பாட்டும் தொகையும்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருநராற்றுப்படை 13

கூறப்படுகின்றான். இவன் ஒருபாற்கோடாது இளைய னாயினும் முதியவர் உவப்பச் சிறுவயதில் நீதிவழங்கிய திறத்தினைப் பொருநாராற்றுப்படை குறிப்பிடுகின்றது.

ஒரு சமயம் நீதி வேண்டி இருமுதியவர்கள் இவனிடம் வந்தனர். தம் அரசன் இளையவனாக இருப்பதைக் கண்டவுடன் அவன் தங்கட்குப் பொருத்தமான நீதி வழங்கும் திறனுடையவனா என்று ஐயுற்று நின்றனர். அவர்கள் மனக் கருத்தை அவர்தம் முகக் குறிப்பால் அறிந்த கரிகாலன் அவர்களுடைய வழக்கை முதியவர் ஒருவரிடம் ஒப்படைப்பதாகக் கூறி அரண்மனையின் உட்சென்றான். பின்னர்த் தானே நரைமுடித்து முதியவன் வேடம் புனைந்துவந்து இருவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் நீதி வழங்கி இறுதியில் தான் இன்னான் என வழக்கிற்கு வந்திருந்த முதியவர்க்கு உணர்த்தினான்.

கரிகாலன் முருகப்பெருமானைப் போன்றே ஆற்றலும் அழகும் உடையவன் என்றும், தாய் வயிற்றிலிருந்த பொழுதே அரசுரிமை எய்தியவன் என்றும். வெண் ணிப் பறந்தலையில் பகைவரைப் புறமுதுகுகாட்டிஒடச்செய்து வெற்றிபெற்ற வேந்தன் என்றும் குறிப்பிடப்படுகின்றான்.

உருவப் பஃறேர் இளையோன் சிறுவன் முருகற் சீற்றத்து உருகெழு குரிசில் தாய்வயிற் றிருந்து தாயம் எய்தி

-பொருநராற்றுப்படை : 180-132

நளியிரு முந்நீர் நாவாய் ஒட்டி வளிதொழில் ஆண்ட உரவோன் மருக! களியியல் யானைக் கரிகால் வளவ! சென்றுஅமர்க் கடந்ததின் ஆற்றல் தோன்ற வென்றோய்!

- புறநானு று