பக்கம்:பாட்டும் தொகையும்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரும்பாணாற்றுப்படை 25

தொண்டைமான் இளந்திரையனின் அரசாட்சிச் சிறப் பினைப் பின்வரும் பாடற்பகுதி கொண்டு புலவர் புலப் படுத்தியுள்ளமையைக் காணலாம்.

அத்தம் செல்வோர் அலறத் தாக்கி கைப்பொருள் வெளவும் களவுஏர் வாழ்க்கைக் கொடியோர் இன்று.அவன் கடியுடை வியன்புலம்; உருமும் உரறாது, அரவும் தப்பா: காட்டு மாவும் உறுகண் செய்யா வேட்டு, ஆங்கு, அசைவுழி அசைஇ, கசைவுழித் தங்கி, சென்மோ, இரவல! சிறக்கநின் உள்ளம்!

-பெரும்பாணாற்றுப்படை : 39 - 45

இரவலன் பெறும் உணவு வருமாறு:

துண்புல் அடக்கிய வெண்பல் எயிற்றியர் பார்வை யாத்த பறைதாள் விளவின் நீழல் முன்றில், நிலஉரல் பெய்து, குறுங்காழ் உலக்கை ஒச்சி, நெடுங்கிணற்று வல்ஊற்று உவரி தோண்டி, தொல்லை முரவுவாய்க் குழிசி முரிஅடுப்பு ஏற்றி, வாராது அட்ட, வாடுஊன், புழுக்கல்வாடாத் தும்பை வயவர் பெருமகன், ஓடாத் தானை, ஒண்தொழிற் கழற்கால், செவ்வரை நாடன், சென் னியம் எனினேதெய்வ மடையின் தேக்கிலைக் குவை இ. நும் பைதீர் கடும்பொடு பதம்மிகப் பெறுகுவிர்!!

-பெரும்பாணாற்றுப்படை 94 - 105

மறமிக்க எயினர் வாழ்க்கை பின்வரும் பகுதியால் விளக்கப்

படுகின்றது.