பக்கம்:பாட்டும் தொகையும்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரும்பாணாற்றும்படை 27

கணம்கொள் சுற்றமொடு கைபுணர்ந்து ஆடும் துணங்கை அம்பூதம் துகில் உடுத்தவை போல், சிலம்பி வால் நூல் வலங்த மருங்கின் குழுமுநிலைப் போரின் முழுமுதல் தொலைச்சி, பகடுஉணர்பு இழிந்த பின்றை, துகள் தப,

-பெரும்பாணாற்றுப்படை 225 -238 அந்தணர் அருங்கடன் இறுக்கும் செயல் பின்வருமாறு பேசப்படுவதைக் காணலாம்.

வண்டல் ஆயமொடு உண்துறைத் தலைஇ புனல் ஆடு மகளிர் இட்ட பொலங்குழை இரைதேர் மணிச்சிரல் இரைசெத்து எறிந்தென புள்ஆர் பெண்ணைப் புலம்புமடற் செல்லாது கேள்வி அந்தணர் அருங்கடன் இறுத்த வேள்வித் துாணத்து அசைஇ. யவனர் ஓதிம விளக்கின் உயர்மிசைக் கொண்ட வைகுறு மீனின், பைபயத் தோன்றும்.

-பெரும்பாணாற்றுப்படை : 311-318 தொண்டைமான் இளந்திரையனின் சிறப்பு :

கச்சியோனே, கைவண் தோன்றல், கச்சிச் சென்றோர்க்கு ஏமம் ஆகியஅளியும் தெறலும் எளிய ஆகலின், மலைந்தோர் தேஎம் மன்றம் பாழ்பட, நயந்தோர் தேஎம் நன்பொன் பூப்ப, கட்புக் கொளல் வேண்டி, நயந்திசினோரும், துப்புக் கொளல் வேண்டிய துணையிலோரும், கல்விழ் அருவி கடற்படர்ந்தாங்கு. பல்வேறு வகையின் பணிந்த மன்னர்இமையவர் உறையும் சிமையச் செவ்வரை, வெண்திரை கிழித்த, விளங்குசுடர் நெடுங்கோட்டுப் பொன்கொழித்து இழிதரும், போக்கு அருங் கங்கைப்