பக்கம்:பாட்டும் தொகையும்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 பாட்டும் தொகையும்

பல்சாலை முதுகுடுமியின் நல்வேள்வித் துறைபோகிய தொல் ஆணை கல் ஆசிரியர் புணர்கூட்டு உண்ட புகழ்சால் சிறப்பின் நிலம்தரு திருவின் நெடியோன் போல, வியப்பும், சால்பும், செம்மை சான்றோர் பலர்வாய்ப் புகர்.அறு சிறப்பின் தோன்றி, அரியதந்து குடிஅகற்றி, பெரியகற்று இசைவிளக்கி, முந்நீர் காப்பண் ஞாயிறு போலவும், பல்மீன் நடுவண் திங்கள் போலவும், பூத்த சுற்றமொடு பொலிந்து. இனிதுவிளங்கி, பொய்யா கல் இசை நிறுத்த புனைதார்ப் பெரும்பெயர் மாறன் தலைவ னாக, கடந்து அடு வாய்வாள் இளம்பல் கோசர் இயல்நெறி மரபின் நின்வாய் மொழி கேட்ப, பொலம்பூண் ஐவர் உட்படப் புகழ்ந்த மறம்மிகு சிறப்பின் குறுநில மன்னர் அவரும் பிறரும் துவன்றி பொற்புவிளங்கு புகழ்அவை நிற்புகழ்ந்து ஏத்த இலங்கிழை மகளிர் பொலங்கலத்து ஏந்திய மணங்கமழ் தேறல் மடுப்ப நாளும் மகிழ்ந்து இனிது உறைமதி பெரும வரைந்துநீ பெற்ற கல்லூழியையே!

-மதுரைக் காஞ்சி : 748 - 782

இவ்வாறு, மதுரைக் காஞ்சி மதுரை மாநகரின் மாண்

பினையும், நிலையாமையின் வகையினையும் வகையுறப் புலப்படுத்தி நிற்கின்றது எனலாம்.