பக்கம்:பாட்டும் தொகையும்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 பாட்டும் தொகையும்

ளிைல் துளிர்த்த கண்ணிரைத் தெறிக்கின்றாள். இது தலை வனைப் பிரிந்து அரண்மனையில் வாடிமெலிந்து வாழும் தலைவியின் நிலையாகும்.

பாடி வீடு அமைத்து போர்மேற் கொண்டிருக்கின்ற தலைவனையும் வாடைக்காற்று விட்ட பாடில்லை. ஆயினும் கடமையுணர்வு உந்தித்தள்ள நள்ளிரவிலும் உறக்கங்கொள்ளாமல், போரிற் புண்பட்ட தன் வீரர் களைக் காண விழைகிறான். தன்னுடன் வீரர்கள் தீப்பந் தங்களைக் கொளுத்திக் கையிலேந்தி வழிகாட்டிக்கொண்டு வரப் புண்பட்ட யானைகளையும் குதிரைகளையும் வீரர் களையும் கண்டு, அவர்களை அன்போடு தட்டிக்கொடுத் துத் தேற்றுவிக்கின்றான். இந்நிலையில் மேற்கொண்ட வினைமுடித்துத் தலைவன் திரும்பி வரவேண்டும் என்று தலைவியின் சார்பில் பெண்ணொருத்தி கொற்றவை யைப் பரவுகின்றாள். நெடுநல்வாடை என்னும் பாட்டின் அமைப்பையும் நோக்குநிலையையும் ஆராயும்பொழுது இப்பாட்டு முழுவதும் ஒரு வழிபாடாகவே அமைந்திருக்கக் காணலாம்.

பாட்டின் தொடக்கத்தில் வாகைத்தினை; முடிவில் வஞ்சித்திணை முத்தாய்ப்பாகக் கொற்றவை நிலை என்ற போக்கில் இப்பாட்டு அமைந்திருப்பதாக உரையாசிரியர் நச்சினார்க்கினியர் கருதுகின்றார். அகப்பொருள் பாலைத் திணை யென்றும், கூதிர்ப்பாசறை என்றும் குறிப்புத் தரு சின்றார். இப் பாட்டு முழுவதும் அகப்பொருள் தழுவிய தாகவே அமைந்திருக்க, வேம்பு தலையாத்த நோன்காழ் எஃகம்’ என்று பாண்டியனின் அடையாளப் பூமாலை யாகிய வேப்பமாலை இந் நூலாசிரியர் நக்கீரராற் குறிப் பிடப்பட்டிருப்பதால் அவர் இப்பாட்டினைப் புறத்தினை யில் அடக்குவர். ஏனெனில் சுட்டி ஒருவர் பெயர்கொளப் பெறாதது அகத்திணையன்றோ! ஆயினும் அறிஞர் பலர் இன்று நெடுநல்வாடையினை அகப்பாட்டாகவே கருது கின்றனர்.