பக்கம்:பாட்டும் தொகையும்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிப் ப்ெ பாட் டு 47

‘ஆரியவரசன் பிரகத்தனைத் தமிழறிவித்தற்குக் கபிலர் பாடிய குறிஞ்சிப்பாட்டிற்கு மதுரை ஆசிரியர் பத்துவாசி நச்சினார்க்கினியர் செய்தவுரை முற்றிற்று: - ய குறிஞ்சிப்பாட்டின் அடியில் காணப்படும் குறிப் வினைக் கொண்டு அந்நூலின் தனிச் சிறப்பினை அறியலாம். ஈண்டு தமிழறிவித்தற்கு என்பது தமிழ்ப் பண்பாட்டின் தலையூற்றாகத் திகழும் களவு ஒழுக்கத் வினைப் புலப்படுத்தி நிற்கும் பாட்டு என விளக்கமுறு விண்ாது. களவுக் காலத்து நிகழ்வனவாக அமையும் பெரும்பான்மையான செய்திகள் இக் குறிஞ்சிப்பாட்டில் பறையே கூறப்பட்டுள்ளன. மேலும், குறிஞ்சிப்பாட்டின் அடி யில் தனிப்பாடலாக இரண்டு வெண்பாக்கள் குறிக்கப் பெற்றுள்ளன.

நின்குற்ற மில்லை நிரைதொடியும் பண்புடையள் என் குற்றம் யானும் உணர்கலேன் - பொன்குற்று அருவி கொழிக்கு மணிமலை நாடன் தெரியுங்கால் தீய திலன். ஆற்றல்சால் கேள்வி அறம்பொரு எளின்பத்தைப் போற்றிப் புனைந்த பொருளிற்றே - தேற்ற மறையோர் மனமெட்டி னைந்தா மணத்திற் குறையாக் குறிஞ்சிக் குணம். மேற்கானும் செய்யுட்கள் கொண்டு பழந்தமிழர்களது களவொழுக்கம் குறிஞ்சிப்பாட்டில் குறையறக் குறிக்கப் பட்டுள்ளது என்பதனை அறியலாம்.

குறிஞ்சிப்பாட்டில் தோழி அறத்தொடு நின்ற நிலை யும், தலைவி, தலைவன் மாட்டுக் கொண்ட அன்பின் மிகுதியும், களவுமணம் நிகழ்ந்தமையைத் தோழி அறி வித்தலும், தலைவியும் தோழியும் தினைப்புனம் காத்த வகையும், தினைப்புனக் காவலினிடையே ஆய வெள்ளம் கனையில் நீராடிய சிறப்பும், 99 பூக்களைப் பறித்துப் பாறையில் குவித்த பாங்கும். தழை உடுத்து, மாலை குடி