பக்கம்:பாட்டும் தொகையும்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 பாட்டும் தொகையும்

விருந்து போற்றும் திறம் காவிரிப்பூம்பட்டினத்தில் மிகுந்துள்ளது. சோற்றை வடித்த கஞ்சி ஆற்று வெள்ளம் போலத் தெருக்களில் பெருக்கெடுத்தோடுகின்றது.

சோறு ஆக்கிய கொழுங் கஞ்சி யாறு போலப் பரத்து ஒழுகி

-பட்டினப்பாலை : 44 - 45 என்பது அவர் தம் வாக்கு.

இச்செல்வ வளத்திற்கெல்லாம் காரணமாய் அமைவது காவிரிப்பூம்பட்டினத்தின் வணிக வளமேயாகும். அங்கு ஏற்றுமதி இறக்குமதி வாணிகம் ஆகிய இரண்டுமே சிறந்திருந்தன. ஏற்றுமதி செய்யப்பட்ட பொருள்களுக்கன்றி இறக்குமதி செய்யப்பட்ட பொருள்களுக்கும் சுங்க வரி விதிக்கப்பட்டது. பிற நாடுகளிலிருந்து கடல் வழியாக வந்த பண்டங்களோடு, பிற நாடுகளுக்கு அனுப்புவதற்கு வந்திருக்கும் பண்டங்களும் சேர்ந்து மலையெனக் குவிந்து கிடக்கின்றன. கட்டுக்காவல் மிகுந்த சுங்கச் சாவடியில் அப்பண்டங்களின் மீது புலி இலச்சினை இடுகின்றனர். அவ்வாறு இடப்பட்ட மூட்டைகள் குவியலாகக் குவித்து வைக்கப்பட்டிருக்கின்றன.

வான்முகந்தநீர்மலைப்பொழியவும் மலைப்பொழிந்தநீர் கடற்பரப்பவும் மாரிபெய்யும் பருவம்போல நீரினின்று நிலத்தேற்றவும் நிலத்தினின்று நீர்ப்பரப்பவும் அளந்தறியாப் பலபண்டம் வரம்பறியாமை வந்தீண்டி அருங்கடிப் பெருங்காப்பின் வலியுடை வல்அணங்கினோன் புலிபொறித்துப் புறம்போக்கி மதிநிறைந்த மலிபண்டம்