பக்கம்:பாட்டும் தொகையும்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 பாட்டும் தொகையும்

வாட்டமுறும்; நீண்டநெறியையுடைய சுரத்தினை நோக்கி நோக்கி என் கண்களும் ஒளியிழந்து பொலிவற்றுப் போயின, எனது அறிவும் என்னைக் கையிகந்து மயக்க முற்று வேறாக நிற்கிறது. நோயை வைத்து உயிர் நீங்காதா யிற்று; உயிரைச் போக்குதற்குரிய மாலைபொழுதும் வந்து இறுத்துவிட்டது; இனி யான் என்ன ஆவேனோ? இறந்தி லேன். இவ்வுலகத்தில் பிறந்தோர் எவரும் ஒருநாள் இறப்பர் என்பது உண்மையாயினும், அந்த இறப்பிற்காக நான் அஞ்சவில்லை. அவ்வாறு இறக்க நேரிட்டால், எனது இனிவரும் பிறப்பு வேறொரு பிறப்பாகி மாறிடின் என் காதலனை மறப்பேனோ என்று அவ்வொன்றனுக்கே நான் அஞ்சுகிறேன்.'”

இவ்வாறு குறிப்பிடும் தலைவியின் உயர்ந்த காதற் பெற்றியினை மேற்கானும் நற்றிணைப் பாடலில் காணலாம்.

இனி, இதே பெற்றி வாய்ந்த பெண்ணொருத்தியின் இல்லறப் பண்பினைக் காண்போம் :

பிறந்த வீட்டுச் செல்வச் செழிப்பைப் பாராட்டாமல், புகுந்த வீட்டின் பொலிவற்ற வாழ்வையே பெரிதாகப் போற்றும் உளங்கொண்ட நங்கையின் வாழ்வினை நற் றிணைப் பாடலென்று நயமுற எடுத்துரைக்கின்றது.

தேன்கலந்த இனிய பாலைப் பொற்கலத்தில் ஒரு கையில் ஏந்திச் சிறுகோல் எடுத்து உண்’ என்று ஓங்கி நிற்க, என் மகள் காற்சிலம்பு ஒலிக்கத் தத்தி ஒடுவாள். முதிய செவிலித்தாயர் பின்தொடர்ந்து பிடிக்க முடியாமல் மெலிந்து நிற்க, அவள் பூப்பந்தல் வரையில் ஒடி உண்ண மாட்டேன் என்று மறுப்பாள். இவ்வாறு சிறு வயதில் சிறுவிளையாட்டு உடையவள் இப்பொழுது இல்லற வாழ்க்கைக்குரிய அறிவையும் ஒழுக்கத்தையும் எவ்வாறு உணர்ந்தாளோ? தான் திருமணத்திற் கொண்ட கணவ னுடைய குடும்பம் வறிமையுற்றதாக, பெற்ற தந்தை