பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 பாண்டி நாட்டுத் திருப்பதிகள் திருக்குணத்தில் ஆழங்கால்பட்ட ஆழ்வாரைப்போல் நாமும் ஆழங்கால்பட முயல்கின்றோம். இத்தகைய ரூபங் கொண்டு எம்பெருமான் எழுந்தருளியிருக்கும் திருமோகூரின் பெயரை வாயாலே சொல்லி அநுசந்தித்து அன்பு மிகுதியால் ஏத்துமாறு ஆழ்வார் பணிப்பதையும் சிந்திக்கின்றோம். இந்த இடத்தில் முமுட்கபடியின் ஒரு வாக்கியம் நம் மனத்தில் எழுகின்றது. "சேவிபக்கல் சேஷபூதனிழியுந்துறை, ப்ரஜை மூலையிலே வாய்வைக்குமாப் {}ు ** iசேஷி-ஈசுவரன்; சேஷபூதன்-ஆன்மா; ப்ரஜைகுழந்தை.) பாலுண்ணும் பச்சைக் குழவி எங்ங்னம் தாயினுடைய மற்ற அவயங்கள் யாவையும் விட்டுத் தான் உயிர் வாழ்வதற்கிடனாயுள்ள அவள் கொங்கையிலேயே வாய் வைக்கின்றதோ அங்ங்னமே சேஷியாகிய ஈசுவரனைப் பற்றப் புகும் சேஷபூதனும் எம்பெருமானுடைய பல உறுப்புகளையும் விட்டு, தான் உய்வதற்கு இடனாய் உள்ள அவன் திருவடிகளையே பற்றுகின்றான் என்பது இதன் பொருள். நம்மாழ்வார் இதற்கு முன்னுள்ள திருவாய்மொழியில், "சரன மாகும் தன தாளடைந்தார்க் கெல்லாம் மரண மானால் வைகுந்தம் கொடுக்கும்பிரான்' (தாள்-திருவடி.) என்று கூறியுள்ளதை நாம் மேலேயும் குறிப்பிட்டுள்ளோம். ஆகவே, எம்பெருமான் திருவடிகளை உபாயமாகப் 37. முமுட்சுபடி-147 38. திருவாய் 9, 10 : 5