பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமோகூர்க் காளமேகம் 81. என்ற ஆழ்வாரின் பாசுரப்பகுதியையும் சிந்திக் கின்றோம். அடுத்து, எம்பெருமானின் எண்ணற்ற திருக்குனங் களைச் சிந்திக்கத் தொடங்குகின்றோம். திருக்குணங் களைப் போலவே அவனுடைய திருநாமங்களும் எண் ணற்றவை என்றாலும், அவை ஆயிரம்’ என்றுகூறும் மரபு ஒன்று உண்டு. ஆயிரம் பெருடைய அவலன்' என்று கம்பன் போற்றியதையும் பேராயிரமுடை பேராளன்?’ என்று திருமங்கையாழ்வார் போற்றிய தையும் நாம் அறிவோம். ஆழ்வாரும் அவனை ஆயிரம் பேருடை அம்மான்' என்றும், பெயர்களாயிரமுடைய தயரதன் பெற்ற மரகத மணித்தடம்' என்றும் போற்றுவதையும் சிந்திக்கின்றோம். ஆபத்தில் உதவக் கூடிய திருக்குணத்தினை விளக்கும் பான்மையில் ஆபத் சகாயன்’ என்ற திருநாமமும் அவனுக்கு உண்டு. ஒரு பாசுரத்தில் இத்திருக்குணத்தில் ஈடுபட்டுப் பேசுகின்றார் ஆழ்வார். காம டைந்த கல்லரண் நமக்கென்று நல்லமரர் தீமை செய்யும் வல்லசுரரை அஞ்சிச்சென் றடைந்தால் காமரு பங்கொண்டு எழுந்தளிப்பான்' என்பது அவர் திருவாக்கு. அடியாருடைய ஆபத்தினைப் போக்குவதற்காகத் தான் விரும்பினபடி எம்பெருமான் மேற்கொள்ளும் திருமேனியைக் காமரூபம்’ என்று குறிப்பிடுகின்றார் ஆழ்வார். காமமாவது இச்சை, இச்சையி னால் எடுத்துக்கொள்ளும் ரூபம் காமரூபம். இந்தத் 32. கம்பரா அயோத் சித்திர 1. 33. பெரி.திரு. 8. 1:8 35. திருவாய் 10. 1:8 34. திருவாய் 10. 1:2 36. திருவாய் 10, 1:10 தி-5