பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

శ్రీ క్షీ பாண்டி நாட்டுத் திருப்பதிகள் |கூத்தன்-அழகிய நடையை உடையவன்; குதற்றும் பீடையைப் பண்ணும்.! என்று ஆழ்வாரால் போற்றப்பெறும் எம்பெருமானிட மிருந்து விடைபெறுகின்றோம். *- காளழேகத்தின் மீது எழுந்த திருவாய்மொழிப் பாசுரங்கள் நம்மிடற்றொலியாக வெளிப்படுகின்றன. வண்திரு மோகூர்க்கு ஈத்த பத்திவை பேத்தவல் ஒார்க்கிi.ர் கெடுமே.”* என்ற பாசுரப் பகுதி நம்மைச் சிந்திக்கத் துண்டுகின்றது. :திருமோகூர்க்கு ஈத்த பத்து’ என்றவிடத்து நாம் அறியத் தக்க செய்தி ஒன் ஆண்டு. பராசரபட்டர் அருளிய திருவாய்மொழித் தனியனில், வான்புகழும் சோலை மதிளரங்கர் வண்புகழ்மேல் ஆன்ற தமிழ்மறைகள் ஆயிரமும்.’’’ என்ற பகுதியால் திருவாய்மொழி ஆயிரமும் திரு. அரங்கத்து அழகிய மணவாளன் மீதுள்ள பாசுரங்கள் என்று சொல்லப் பெற்றுள்ளது. இஃது எப்படிப் பொருந்தும்? என்ற வினா எழுகின்றது. 'கங்குலும் பகலும்' என்ற திருவாய் மொழி ஒன்றே அரங்கநாதன் மீது எழுந்ததாகும். அப்படி யிருக்க, திருவாய்மொழி ஆயிரமும் அரங்கநாதன் மீது எழுந்தனவாகச் சொல்லப் பெற்றதற்குச் சான்று யாது? என்ற வினா முற்காலத்திலேயே எழுந்தாக அறிக்கின்றோம். அதற்கு நம் பண்டைய வைணவ. 42. திருவாய் 10.1:11 - 43. திருவாய்.தனியன் 44. திருவாய் 7.2.