பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/108

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமோகூர்க் காளமேகம் 89 பற்றிய குறிப்பு வருகின்றது பத்துப்பாட்டில் ஒன்றாகிய மதுரைக் காஞ்சி பழையன் என்ற ஒரு குறு நிலமன்னன் 3 نماز ترانه திருமோகூரை ஆண்டதாகக் குறிப்பிடுகின்றது. of "பழைய மோகூர் அவை பகம் விளங்க கான்மொழிக் கோசர் தோன்றி பன்ன' என்ற அடிகளினால் இதனை அறியலாம். பழையனுடைய நியாயசபையில் கோசர் என்ற வீரர்கள் இருந்தனர். 'நாலுார்க் கோசர்' என்று குறுந்தொகையால் குறிப் பிடப்பெறுபவரும் இவரே வம்பமோரியர் வடுகரை முன்னர் அனுப்பி அவர்களைத் தொடர்ந்து தென்னாட் டின்மீது படையெடுத்து வந்தபொழுது பழையன் அவர்கட்குப் பணியாமல் கோசரின் துணையால் அவர் 56ು$r ஆலம்பலத்தில் வென்றதாக அகநானூறு பேசும். இதனால் மெளரியர் காலத்துக்கு முன்ன தாகவே மோகூர் பழம் பெருமையுடன் சிறப்புற்றி ருந்தது என்பதை அறிகின்றோம். பழையன் காக்கும் குழைபயில் நெடுங்கோட்டு வேம்பு முதல் தடிந்த எத்துவாள் வலத்துப் போந்தைக் கண்ணிப் பொறைய கேட்டருள்" என்ற சிலப்பதிகார வரிகளால் பழையனைச் செங் குட்டுவன் வென்று அவன் காவல் மரமாகிய வேம்பினை தடிந்த நிகழ்ச்சியை அறிகின்றோம். இதனை, "பழையன் காக்கும் கடுஞ்சினை வேம்பின் முழாரை முழு முதல் துமியப் பண்ணி என்ற பதிற்றுப் பத்து வரிகளும் அரண் செய்கின்றன. திருமோகூருக்கு வரலாற்றுச் சிறப்பும் உண்டு, கிரேக்க நாட்டு வானநூலறிஞரான தாலமி மோகூரைத் 51. மதுரைக் காஞ்சி. அடி 508, 9 52. குறுந் 13. 53. அகம்-26 (அடி 10-13.) 54. சிலப்-27 நீர்ப்படை, அடி 124-26 55. பதிற். 5-ஆம்பத்து-பதிகம்.