பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமாலிருஞ்சோலை வள்ளல் st வட்டமிடுகின்றன. இக்காட்சியில் ஆழங்கால் பட்டுள்ள 'அனுகால் வரிவண்டுகள் ஆயிர சிறுகலைப் பாடும் தென்திரு மாலிருஞ் கோலைபே' (சிறு காலை விடியற்காலத்தில்; என்ற பெரியாழ்வாரின் பாசுரப் பகுதியை எண்ணி மகிழ்கின்றது. காலமுணர்த்தும் சோதிடன் போன்று உரிய காலங்களில் பூக்கும் மேகமண்டலம் வரை ஓங்கி யுயர்ந்த வேங்கை மரங்களும் கோங்குமரங்களும் அங்குச் சூழப் பெற்றுள்ளன." ஒன்றோடொன்று பிணங்கி நிற்கும் விண்ணளாவும் மூங்கில்களின் நுனி மலையுச்சியிலுள்ள தேனடைகளின் வாயைக் கிழிப்ப தனால் தேனிக்கள் நாற்புறமும் பறந்தோடுகின்றன; அதனால் தேனின் மணம் எம்மருங்கும் வீசுகின்றது." வரு மழை தவழும் மாலிருஞ்சோலையில் முகில்கள் ஆழ்கடலில் நீரை முகந்து கொண்டு விண்ணில் ஏறி இடி முழக்கம் செய்கின்றன, அவ்வொலியைக் கேட்கும் சிங்கங்கள் அது யானையின் பிளிறல் என்று கருதி எதிர் முழக்கம் செய்கின்றன. மதங் கொண்ட களிறுகளின் கவுள்களின் வழியே மதநீர் பெருகி வருகின்றது. அதனை வண்டுகள் பருகியும் அதனால் வற்றாது மேலும் பாய்ந்து சாரல்தோறும் வெள்ளமிடுகின்றது.’ மலை யினின்றிழியும் அருவிகள் சந்தனக் கட்டைகளையும் இரத்தினக் கற்களையும் உருட்டிக் கொண்டு வருகின்றன.* இக்காடசி பெரியாழ்வாரின், 17. பெரி. திரு. 9.8:2 18. பெரியாழ். திரு. 4.2:2 19. பெரி திரு. 9.8:3,4, 22. ഒു. 9.8:? 20. ഒു 9.8:5 28. ഒു. 9.8:1 21. ഒു 9.8:6 - தி-7