பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நூல் முகம் விடங்கலந்து அமர்ந்த அரவணைத் துயின்று விளங்கணிக்கு இளங்கன்று விசிறி குடங்கலந்து ஆடி குரவைமுன் கோத்த கூத்த, எம் அடிகள் தம் கோயில் தடங்கடல் முகந்து விசுபிடைப் பிளிற தடவரைக் களிறுஎன்று முனிந்து மடங்கல்கின்று அதிரும் மாலிருஞ் சோலை வணங்குதும் வாம. நெஞ்சே!” -திருமங்கையாழ்வார் சென்னைப் பல்கலைக் கழக விதி பி. எஸ். சி எல். டி. பட்டங்களுடன் உயர்நிலைப் பள்ளியில் தலைமையாசிரிய ராகப் பணி புரிந்த என்னை தமிழ் எம். ஏ. தேர்வு எழுத அனுமதிக்கவில்லை. இதனால் பத்தாண்டுகள் தாமதாயிற்று எம். ஏ. பட்டம் பெற மீண்டும் பிஎச். டி. பட்டத்திற்கு ஆராய்ச்சி செய்யப் பல்கலைகழக விதி குறுக்கிட்டது. தமிழகத்தைத் துறந்து ஆந்திரம் வந்தும் நிழல் தொடர் வது போல இங்கும் அதே விதி தடையாக இருந்தது. நான்கு ஆண்டுகள் முயன்று ஏழுமலையான் திருவருளால், கருணை புள்ளம் கொண்ட துணைவேந்தர் திரு. எஸ், கோவிந்த ராஜுலு அவர்களின் துணையால், சிறியேனது சிறுமதியால் இந்ந விதியை வென்றேன். பதிவு பெறுவ தற்கே பதினைந்து ஆண்டுகள் கடந்தன. 1964-இல் பிஎச். டி. பட்டத்திற்குப் பதிவு செய்து கொள்ள இசைவு வழங்கியது திருப்பதிப் பல்கலைக் கழகம். உலோகாயதப் பொருளை நீக்கி இறைவனையே பொருளாகக் கொண்ட 'நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தை ஆய்வுப் பொருளாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டேன். திருவேங்கடவன் பல்கலைக் 3. பெரியதிருமொழி, 9. 5. 6